காற்றினிலே வரும் கீதம் பாடல் வரிகள்

Movie Meera
படம் மீரா
Music S. V. Venkatraman
Lyricist Papanasam Sivan
Singers         M. S. Subbulakshmi
Year 1945
பெண் : காற்றினிலே…..
ஏ…..ஏ…..ஏ…..வரும் கீதம்
காற்றினிலே…..
 
பெண் : காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
 
பெண் : பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே நெஞ்சினில்
இன்ப கனலை எழுப்பி
நினைவளிக்கும் கீதம்
 
பெண் : காற்றினிலே வரும் கீதம்
 
பெண் : சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தார கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
 
பெண் : காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
 
பெண் : நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் காலமெல்லாம்
அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
 
பெண் : காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே…….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *