எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே பாடல் வரிகள்

Movie Meera
படம் மீரா
Music S. V. Venkatraman
Lyricist Parthi Bhaskar
Singers         M. S. Subbulakshmi
Year 1945
பெண் : எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
யது வீரனை நந்தகுமாரனை
நினைந்து எனது உள்ளமே
யது வீரனை நந்தகுமாரனை
நினைந்து எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
 
பெண் : மலரே இருவிழி
பங்கஜமலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை
மலரே திருவடிகள்
மந்த ஹாசமுந் தவழ்ந்த
சுந்தர முகாரவிந்தம் நினைந்து
 
பெண் : எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே
 
பெண் : அன்னை தந்தை பதியுமவன்
அருந்துணை நவநிதியுமவன்
அன்னை தந்தை பதியுமவன்
அருந்துணை நவநிதியுமவன்
 
பெண் : இன்பமும் அழகும் அவனே
என் இன்பமும் அழகும் அவனே
எழில்தரு மணி பணி அவனே
மீராப்ரபு கிரிதர கோபாலனை
வரதனை நினை தோறும்
மீராப்ரபு கிரிதர கோபாலனை
வரதனை நினை தோறும்
 
பெண் : எனது உள்ளமே
நிறைந்ததின்ப வெள்ளமே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *