காட்டு பயலே கொஞ்சி போடா பாடல் வரிகள்
Movie | Soorarai Pottru | ||
---|---|---|---|
படம் | சூரரைப் போற்று | ||
Music | G. V. Prakash Kumar | ||
Lyrics | Snehan | ||
Singers | Dhee | ||
Year | 2020 |
பெண் : லல்லாஹி லைரே லைரே….
லல்லாஹி லைரே லைரே….
லல்லாஹி லைரே லைரே லை….
லல்லாஹி லைரே லைரே….
பெண் : காட்டு பயலே
கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ
மொரட்டு முயல
தூக்கி போக வந்த பையடா நீ
பெண் : கரட்டு காடா கெடந்த என்ன
திருட்டு முழிக்காரா
தொரட்டி போட்டு இழுகுறடா நீ
திருட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பார்த்து
சுரட்டு பாம்பா ஆக்கி புட்ட நீ
பெண் : என் முந்தியில சொருகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போற நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வெச்சிருக்க நீ
பெண் : யான பசி
நான் உனக்கு யான பசி
சோளப் பொரி
நீ எனக்கு சோளப் பொரி…..
பெண் : லல்லாஹி லைரே லைரே லை….
லல்லாஹி லைரே லைரே….
லல்லாஹி லைரே லைரே லை….
லல்லாஹி லைரே லைரே….