நடு சாமம் போயாச்சு  பாடல் வரிகள் 

Movie Name  Archanai Pookal
திரைப்பட பெயர் அர்ச்சனை பூக்கள்
Music Ilaiyaraja
Lyricist Vaali
Singer Malaysia Vasudevan and R. Bhaskar
Year 1982

ஆண் : ஆ…..ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆ…..ஆ…..ஆ….ஆ….
ததரினனனா ததரினனணன் னா

ஆண் : நடு சாமம் போயாச்சு…… அட ச்சே
நாய் தூங்கும் பொழுதாச்சு
அட நீ மட்டும் ஏன்டா முழுச்சிருக்க

ஆண் : நடு சாமம் போயாச்சு
நாய் தூங்கும் பொழுதாச்சு
நான் மட்டும் தூங்கலடா
அட ஞானங்கள் தூங்காதடா
கீழ்ஜாதி மேல் ஜாதி பல ஜாதி இருந்தாலும்
பொஞ்சாதி இல்லையடா
என்ன விட்டு போனாளே போனாளடா

ஆண் : நடு சாமம் போயாச்சு……ஏ…..ஏ….ஹே

ஆண் : போடா மடப்பயலே என்ன கவல
எட்டு ஜாணில் கட்டிய வீட்டுக்குள்ளே
போடா மடப்பயலே என்ன கவல
எட்டு ஜாணில் கட்டிய வீட்டுக்குள்ளே

ஆண் : ஞான விளக்கெடுத்து வச்சு கொளுத்து
நெஞ்சுக்குள்ள கொட்டிய குப்பைகள
தொட்டாத் தப்பு விட்டா தப்பு முட்டா பூமியிலே
எல்லாம் நாடகம்தான்……
சொல்லப்போனா எல்லாம் பூடகம்தான்

ஆண் : நடு சாமம் போயாச்சு……ஏ…..ஏ….ஹே
நடு சாமம் போயாச்சு
நாய் தூங்கும் பொழுதாச்சு
நான் மட்டும் தூங்கலடா
அட ஞானங்கள் தூங்காதடா

ஆண் : ஆராரி ராரோ ஆராரோ உங்க ஆத்தா இல்ல
தூங்கு பா தூங்குடா
தூங்குடா தம்பி ஆராரோ உங்க ஆத்தா இல்ல
இப்ப தூங்கு அப்பறம் முழிச்சுக்கலாம்
கஞ்சி கஞ்சின்னு படுத்தினியே
படவா ராஸ்கல் தூங்குடானா
கஞ்சிய குடிச்சுட்டும் படுத்துறியே
குடுதேன்னா படவா ஒன்னுக்கு இருந்துடுவே
தூங்குடா தம்பி ஆராரோ உங்க ஆத்தா இல்ல

ஆண் : மாசம் தவமிருந்து மடி சுமந்து
மண்ணை தின்னு பெத்தவ பெண்ணொருத்தி
மாசம் தவமிருந்து மடி சுமந்து
மண்ணை தின்னு பெத்தவ பெண்ணொருத்தி

ஆண் : மஞ்சள் குளிச்சிருந்து மையல் விருந்து
உண்ண சொல்லி தந்தவ இன்னொருத்தி
தொட்டில் விட்டு கட்டில் தொட்டு
பட்டேன் பாடுகளை
சொன்னா கேளுங்கடா ஞானங்கெட்ட
சோதாப் பசங்களா

ஆண் : நடு சாமம் போயாச்சு……ஏ…..ஏ….ஹே
நடு சாமம் போயாச்சு
நாய் தூங்கும் பொழுதாச்சு
நான் மட்டும் தூங்கலடா
அட ஞானங்கள் தூங்காதடா
கீழ் ஜாதி மேல் ஜாதி பல ஜாதி இருந்தாலும்
பொஞ்சாதி இல்லையடா
என்ன விட்டு போனாளே போனாளடா

ஆண் : நடு சாமம் போயாச்சு……
நடு சாமம் போயாச்சு……

Tags: Archanai Pookal, Archanai Pookal Songs Lyrics, Archanai Pookal Lyrics, Archanai Pookal Lyrics in Tamil, Archanai Pookal Tamil Lyrics, அர்ச்சனை பூக்கள், அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள், அர்ச்சனை பூக்கள் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *