காவிரியே…காவிரியே பாடல் வரிகள் 

Movie Name  Archanai Pookal
திரைப்பட பெயர் அர்ச்சனை பூக்கள்
Music Ilaiyaraja
Lyricist Gangai Amaran
Singer S. P. Balasubrahmanyam and S. Janaki
Year 1982

ஆண் : லால்லல் லா லால்லல் லா

ஆண் : காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

ஆண் : காவிரியே…
பெண் : காவிரியே
காதலன் போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலி நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

பெண் : காவிரியே
ஆண் : காவிரியே…
காதலி போல் விளையாடுறியே

பெண் : பொன்னை அள்ளித் தூவுதே
மஞ்சள் நிற மேகம்
என்னை அள்ளிப் போகுதே
கொஞ்சுகிற ராகம்

பெண் : என்னமோ…
ஆண் : ம்ம்
பெண் : பண்ணுதே…
ஆண் : ம்ம்
பெண் : இந்த மன வேகம்

ஆண் : அள்ளிக்கொள்ள வந்தேனம்மா
அன்பை அள்ளித் தந்தேனம்மா
இனிமேல் யாவும் நீதானம்மா

பெண் : ஆசை வச்சேன் ஆசை வச்சேன்
அம்மன் கோவிலு பூஜை வச்சேன்
ஒன்ன பார்த்த ஒரு பாசம் வச்சேன்
உன் உள்ளம் பார்த்ததும் நேசம் வச்சேன்
காலம் நேரம் ஒண்ணாச் சேர்ந்தது

ஆண் : காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே

ஆண் : காதலுக்கு மார்கழி
ரொம்ப நல்ல மாசம்
ஹோய் கண்டபடி
வீசுதே மல்லியப்பூ வாசம்

ஆண் : கையிலே…
பெண் : ஹா
ஆண் : கையிலே…
பெண் : ம்ம்
ஆண் : கன்னிப்பொண்ணு பேசும்

பெண் : புதுசா பாடம் சொல்லி
மெதுவாய் என்னை அள்ளி
சுகமா தாங்க வாழ் நாளெல்லாம்

ஆண் : காவிரியே…காவிரியே
காதலி போல் விளையாடுறியே
காவியம் ஆயிரம் பாடுறியே
இந்த காதலன் நெஞ்சத்தைக் கூடுறியே
ஏங்கும் நெஞ்சம் இங்கே வாடுது

பெண் : லால்லல் லா லால்லல் லா
லாலா லல லா லால்லல் லா

Tags: Archanai Pookal, Archanai Pookal Songs Lyrics, Archanai Pookal Lyrics, Archanai Pookal Lyrics in Tamil, Archanai Pookal Tamil Lyrics, அர்ச்சனை பூக்கள், அர்ச்சனை பூக்கள் பாடல் வரிகள், அர்ச்சனை பூக்கள் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *