இந்திர ஜால வித்தைக்காரன் பாடல் வரிகள்

Movie Raja Mukthi 
படம் ராஜமுக்தி
Music C. R. Subburaman
Lyricist Papanasam Sivan
Singers         Serukulathur Sama
Year 1948
ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
 
ஆண் : இன்பமுடன் துன்பம் மாறி மாறிக் காட்டுவான்
இருளும் ஒளியும் சுழலும்
வெட்ட வெளியை காட்டுவான்
அன்புருவாய் அன்பர் மனம் தன்னிலாடுவான்
அன்பர் துன்பம் கண்டு பொறாரங்கவிடோபா
ஸ்ரீரங்கவிடோபா அவன்
 
ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
 
ஆண் : நல்லவர் போல் நம்மை சுற்றும் கொடியவர் உண்டு
நல்லவர் பலர் பகைவர் போல காண்பதும் உண்டு
எல்லாம் அரங்கன் அருள் விலாஸ நாடக மேடை
எதிலும் மயங்காதவர்க்கு
பேரின்ப வீடே அருளும்
 
ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்
 
ஆண் : ஏழைகளே ஏழைகளின் துன்பம் உணர்வார்
இறுமாப்புடன் பொருளுடையோர்
கண் உள்ள குருடர்
ஏழைகளே ஊழியர் தம் துன்பம் உணரார்
கோபுரத்தை பொம்மை தாங்கும்
நினைவுனக்கேனோ அந்த
 
ஆண் : இந்திர ஜால வித்தைக்காரன் எம்பெருமான்
உலகமெல்லாம் ஆட்டி வைக்கும் சூத்ரதாரன்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *