மானிட ஜென்மம் மீண்டும் பாடல் வரிகள்

Movie Raja Mukthi 
படம் ராஜமுக்தி
Music C. R. Subburaman
Lyricist Papanasam Sivan
Singers         M. K. Thyagaraja Bhagavathar
Year 1948
ஆண் : மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்
உயர் மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்
உயர் மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ…ஓ…ஓ…ஓ…
 
ஆண் : ஞான வைராக்யம்
ஞான வைராக்யம்
தவம் ஜீவகாருண்யம்
உண்மை ஞான வைராக்யம்
தவம் ஜீவகாருண்யம்
உண்மையான பக்தி பகுத்தறிவுடன்
இகபர சுகம் தரும் கருணையாம்
 
ஆண் : மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்…..ஈ….ஈ…..
 
ஆண் : கருவறையினுள் கிடந்து வெளியில்
வரும் துயர் நினைந்தாலும்
கருவறையினுள் கிடந்து வெளியில்
வரும் துயர் நினைந்தாலும்
 
ஆண் : குடல் கலங்குதே
இங்கெதிரில் மரணம்
எனும் வெம்புலியும் சீறுதே
கலங்குதே இங்கெதிரில் மரணம்
எனும் வெம்புலியும் சீறுதே
 
ஆண் : இருவினை வசமாம்
இவ்வுடலொரு நீர்க்குமிழி
இருவினை வசமாம்
இவ்வுடலொரு நீர்க்குமிழி
இதனிடை உயர்
நெறியடைய மெய்
இறைவன் அருளின் வேட்கை
இதனிடை உயர்
நெறியடைய மெய்
இறைவன் அருளின் வேட்கை
 
ஆண் : உடையராகி இடையறாத
திருவடி நினைவுடனே
உடையராகி இடையறாத
திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரி புரமதை
ஒருமுறை கண்டு பணிந்து ப்ரபோ
பாண்டுரங்க ஜெய விட்டலை
என்று பணிந்திட
 
ஆண் : மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர் உயர்
மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ…ஓ…ஓ…ஓ…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *