இங்கும் அங்கும் எங்கும் பாடல் வரிகள்

Movie Raja Mukthi 
படம் ராஜமுக்தி
Music C. R. Subburaman
Lyricist Papanasam Sivan
Singers         M. K. Thyagaraja Bhagavathar,
M. L. Vasanthakumari
Year 1948
ஆண் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
 
பெண் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
 
இருவர் : பாண்டுரங்கன் அருள் இருந்தால்……ஆ…ஆ…
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டுரங்கன் அருள் இருந்தால்…ஆ…ஆ…
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
 
ஆண் : பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல்
 
பெண் : பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல்
 
இருவர் : மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு
மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு
 
இருவர் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
 
பெண் : உலகெல்லாம் மகிழவே தனதுபொருள்
 
ஆண் : உடலுயிரும் உதவும் உதாரராய்
 
பெண் : உலகெல்லாம் மகிழவே தனதுபொருள்
 
ஆண் : உடலுயிரும் உதவும் உதாரராய்
 
பெண் : உலகிலே பொருளிலும் பற்றிலார்
 
ஆண் : உத்தம சத்குண வித்தகராய்
 
பெண் : உலகிலே பொருளிலும் பற்றிலார்
 
ஆண் : உத்தம சத்குண வித்தகராய்
 
பெண் : ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல்
 
ஆண் : வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
 
பெண் : ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல்
 
ஆண் : வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்
 
இருவர் : இரவு பகல் ரங்கன் நினைவில்
மனோலயமாய் அந்தரங்க
சமரச உணர்வோடிருப்பவர்க்கு
ரங்கன் நினைவில்
மனோலயமாய் அந்தரங்க
சமரச உணர்வோடிருப்பவர்க்கு
 
இருவர் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டுரங்கன் அருள் இருந்தால்…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *