என்ன ஆனந்தம் இதிலே பாடல் வரிகள்

Movie Raja Mukthi 
படம் ராஜமுக்தி
Music C. R. Subburaman
Lyricist Papanasam Sivan
Singers         M. K. Thyagaraja Bhagavathar,
M. L. Vasanthakumari
Year 1948
இருவர் : என்ன ஆனந்தம் இதிலே
என்ன ஆனந்தம்
நாம் இந்நாள்வரை
அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
நாம் இந்நாள்வரை
அனுபவத்தறியோம் ஆஹா
என்ன ஆனந்தம்
 
ஆண் : பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
 
பெண் : புன்னகை முகம்
ஆயிரமும் மலர்ந்தது
 
ஆண் : பொன்னுடன் ஆடையை
கண்டதும் எளியோர்
 
பெண் : புன்னகை முகம்
ஆயிரமும் மலர்ந்தது
 
இருவர் : என்ன ஆனந்தம்
 
ஆண் : சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும் ஒரு
சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும்
 
பெண் : தானே மனிதனுக்குத்
தேவை உணர்ந்தேன்
 
ஆண் : சாண் வயிற்றுக் குணவும்
ஆடை இரண்டும்
 
பெண் : தானே மனிதனுக்குத்
தேவை உணர்ந்தேன்
 
ஆண் : கருணை முகம் நினைந்து
உருகினேனே
கருணை முகம் நினைந்து
உருகினேனே
 
பெண் : அதில் எனக்கென்று தனியின்பம்
பருகினேனே
 
ஆண் : கருணை முகம் நினைந்து
உருகினேனே
 
பெண் : அதில் எனக்கென்று தனியின்பம்
பருகினேனே
 
இருவர் : ரங்கன் கருணையே
அழியாப் பொருள்
ரங்கன் கருணையே
அழியாப் பொருள்
ஏழைப் பங்காளன்
திருமகள் மணவாளன்
ஸ்ரீ பாண்டுரங்கன் கருணையே…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *