சுவாமீ அருங்கனிகள் பாடல் வரிகள்

Movie Raja Mukthi
படம் ராஜமுக்தி
Music C. R. Subburaman
Lyricist Papanasam Sivan
Singers         M. K. Thyagaraja
Bhagavathar,
P. Bhanumathi
Year 1948
பெண் : {சுவாமீ அருங்கனிகள்
இவையே பாரீர்
அமுதத்தில் மேலான
தீஞ்சுவையாகும்} (2)
அருந்த அருந்த இது தெவிட்டாது
விருப்பமுடன் வாங்கி
உண்ணவேண்டும்
சுவாமீ அருங்கனிகள்
இவையே பாரீர்
அமுதத்தில் மேலான
தீஞ்சுவையாகும்
 
ஆண் : வானவர் அறியாத
சுவையாம் கனியே
மதுர நல் மாவின் கனி
ஊனொடு என்பெல்லாம்
உண்மையில் இனிக்கும்
ஒரு புது தீங்கனியே ஆகும்
ஒரு புது தீங்கனியே
 
பெண் : தீதரும் அதரத்தை
நேராகும்மா
துளை நல்முத்து பாரீர்
 
ஆண் : என்ன
 
பெண் : மாதர்கள் அதரத்தை
 
ஆண் : என்ன சொல்கிறாய்
 
பெண் : மாதவன் அதரத்தை நேராகும்
 
ஆண் : ஆஹா எங்கே
இன்னொரு முறை} (வசனம்)
 
பெண் : மாதவன் அதரத்தை நேராகும்
மாதுளை நல்முத்து பாரீர்
 
ஆண் : கனி ரசமல்லாது உன் உள்ளமும்
கனிந்த அன்பும் கலந்தேன் சுவைதான்
 
பெண் : என் கனி சுவைக்கென்ன
இனிமையில்லையே
இன் சுவை மிகும்
உங்கள் சொல்லே
 

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *