உன்னையே அன்புடன் பாடல் வரிகள்

Movie Ashok Kumar
படம் அசோக்குமார்
Music Alandur Sivasubramaniyam
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. K.
Thiyagaraja Bagavathar
Year 1941
ஆண் : உன்னையே அன்புடன்
வாரியணைக்கும்
உன்னையே அன்புடன்
வாரியணைக்கும்
அன்னையே
ஊணினைத் தேடவும்
சென்றாள்…ஆ…
ஆண் : விதி வசமிதே
கண்ணை இழந்தேன்
காணவுமில்லேன்
என் கண்ணை இழந்தேன்
காணவுமில்லேன்
கண்மணி நீயே
கண்ணுறங்காயே
கண்மணி நீயே
கண்ணுறங்காயே
ஆண் : வானமுதே தேனே
வாழ்குல சீமானே
வானமுதே தேனே
வாழ்குல சீமானே
வளர் கண் தாலேலோ
வளர் கண் தாலேலோ
ஆண் : புன்னகை மாமுக
கனி பிழி ரஸமே….ஏ…..
கனி பிழி ரஸமே
ஆண் : தாதியர் சூழத் தங்க
மஞ்சமேலுறங்க…..ஆ…
மஞ்சமேலுறங்க
ஆண் : தாதியர் சூழத் தங்க
மஞ்சமேலுறங்க…..ஆ…..
விழிகள் குளிரக்காணும்
பூஜை செய்திலோமே
பூஜை செய்திலோமே
தங்கமே ஏழை
எமதாவியும் நீயே
தங்கமே ஏழை
எமதாவியும் நீயே
ஆவியும் நீயே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *