பாட்டையென்ன சொல்வேன் பால்கி பாடல் வரிகள்

Movie Rajakumari
படம் ராஜகுமாரி
Music S. M. Subbaiah Naidu
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. M. Mariyappa and
T. V. Rathinam
Year 1947
இருவர் : பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
 
இருவர் : பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும்……
ஆ……ஆ……ஆ
பாட்டினிலும் பொருள் தோற்றத்திலும் இன்னிசை
கூட்டுறவிலும் இன்பம் ஊட்டிடும் ஆனந்தப்
 
இருவர் : பாட்டையென்ன சொல்வேன் பால்கி
பாவலர் ஞான ஓவியமான தமிழ்
பாட்டையென்ன சொல்வேன் பால்கி
 
ஆண் : {எப்படி சங்கீதம்
 
ஆண் : சக்கரை பொங்கல் மாதிரி
ஒரே இனிப்பு ஆனா
 
ஆண் : என்ன
 
ஆண் : இந்த பாட்டோட ஒருவர் ஆடினா
 
ஆண் : ஒருவர் என்ன இருவர் ஆடட்டும்
 
ஆண் : ம்…ஆடட்டும்} (வசனம்)
 
இருவர் : ஆட்டம் ஆனந்தம் தரும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
 
ஆண் : {எப்படி ஆட்டம்
 
ஆண் : ஆட்டம் நல்லாத்தான் இருக்கு
ஆனா அஞ்சாறு பேர் சேர்ந்தாடினா
 
ஆண் : அப்படியே ஆடட்டும்
 
ஆண் : சரி ஆடட்டும்} (வசனம்)
 
இருவர் : பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி
தமிழ் பாட்டுக்கிசைந்த ராக தாளங் கூட்டி
பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி
கண் பார்வையுடன் கரங்கள் கால்களாட்டி
தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி
புலவர் தீட்டும் கவிப்பொருள் தெரியக்காட்டி
சிந்தை மகிழயிந்த தேகாரோக்யம் பெரும்
 
பெண்கள் : ஆட்டம் ஆனந்தம் தரும்
அழகான மயில் போலும்
ஒயிலாக ஆடும் சதுர்
ஆட்டம் ஆனந்தம் தரும்
 
ஆண் : {சிஷ்யா
 
ஆண் : குருஜி
 
ஆண் : மனதிற்கு ஒன்றும் திருப்தியாக
இல்லையே
 
ஆண் : ம்…அதை நானும் நெனச்சேன்
நீங்களும் சொன்னீங்க
 
ஆண் : சரி இனி பெண் தேடும் வேலைக்கு
நாமே புறப்படுவோம்
 
ஆண் : சரி புறப்படுவோம்} (வசனம்)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *