அன்பின் பெருமை அருமை பாடல் வரிகள்

Movie Rajakumari
படம் ராஜகுமாரி
Music S. M. Subbaiah Naidu
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. M. Mariyappa and
T. V. Rathinam
Year 1947
ஆண் : அன்பின் பெருமை அருமை அதனை மனம்
அன்றி வாயில் சொல்லத்தரமா…ஆ…ஆ…
அன்பின் பெருமை அருமை அதனை மனம்
அன்றி வாயில் சொல்லத்தரமா……ஆ…..
 
பெண் : சொந்தம் தேடும் வாழ்வினில் அது போல்
சுகிர்தம் வேறெதுவும் தருமா
சொந்தம் தேடும் வாழ்வினில் அது போல்
சுகிர்தம் வேறெதுவும் தருமா…ஆ…
 
ஆண் : அடிமையிடம் ஓர் ராஜகுமாரி
அருகில் நாடியதும் அன்பல்லவோ
அடிமையிடம் ஓர் ராஜகுமாரி
அருகில் நாடியதும் அன்பல்லவோ
 
பெண் : அனைவரும் புவிமேல் ஒன்றே என்றும்
அழகொடு பழகுதல் நன்றல்லவோ
அனைவரும் புவிமேல் ஒன்றே என்றும்
அழகொடு பழகுதல் நன்றல்லவோ
 
ஆண் : ஆணுயர்வும் பெண்ணாருயர்வும்
ஆகும் தூய அன்பினிலே
ஆணுயர்வும் பெண்ணாருயர்வும்
ஆகும் தூய அன்பினிலே
 
பெண் : நாமும் நேரே காணும் காட்சி
நாளும் அன்பாலே இன்பம்
நாமும் நேரே காணும் காட்சி
நாளும் அன்பாலே இன்பம்
 
இருவர் : அன்பின் பெருமை அருமை அதனை மனம்
அன்றி வாயில் சொல்லத்தரமா
சொந்தம் தேடும் வாழ்வினில் அதுபோல்
சுகிர்தம் வேறெதுவும் தருமா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *