வாழ்வோம் மாதர்கள் நாமே வாழ்வோம் பாடல் வரிகள்

Movie Rajakumari
படம் ராஜகுமாரி
Music S. M. Subbaiah Naidu
Lyricist Udumalai Narayanakavi
Singers         T. V. Rathinam and Chorus
Year 1947
பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
 
பெண் : வளர்கலையில் அரசியலில்
வாகை சூடி வீரமதாய்
வளர்கலையில் அரசியலில்
வாகை சூடி வீரமதாய்
 
பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
 
பெண் : ஆடவர் தம தடிமை
ஆஹாஹா நாமா
அவர் மதிக்கவே ஜகம் துதிக்கவே
ஆடவர் தம தடிமை ஆஹாஹா நாமா
அவர் மதிக்கவே ஜகம் துதிக்கவே
 
பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
வாழ்வோம்
 
பெண் : வாளெடுக்கவும் பெண் தன்மை
சீர் படைக்கவும்
வாளெடுக்கவும் பெண் தன்மை
சீர் படைக்கவும்
வகையாய் செயவே மதியினால்
பெருமையாய் மானில மீதினிலே
 
பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
 
பெண் : சீர்தரும் சமத்துவம்
தேசிய மகத்துவம்
சீர்தரும் சமத்துவம்
தேசிய மகத்துவம்
பார் மீதினில் மேலோங்கிடவே
பார் மீதினில் மேலோங்கிடவே
பழகுவோம் உலகிலே பழகுவோம் உலகிலே
பா மணம் வீசவே துதி பேசவே
 
பெண்குழு : வாழ்வோம் வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்
வாழ்வோம்
மாதர்கள் நாமே வாழ்வோம்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *