ஸத்வ குண போதன் பாடல் வரிகள்

Movie Ashok Kumar
படம் அசோக்குமார்
Music Alandur Sivasubramaniyam
Lyricist Udumalai Narayanakavi
Singers         M. K.
Thiyagaraja Bagavathar
Year 1941
ஆண் : ஸத்வ குண போதன் ஸத்வ குண போதன்
ஸத்வ குண போதன் சரணமிருக்க
ஸத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ
ஸத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ
ஆண் : கல்லினுள் தேரைக்கும்…ஆ…ஆ…
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்
ஆண் : ஸத்வ குண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ
ஸத்வ குண போதன்
ஆண் : {மகேந்திரா……ஒரு கைக்கோல் கொடு
அதுதான் நீ எனக்கு செய்யக்கூடிய உதவி
ஆண் : செங்கோலைப் பிடிக்க வேண்டிய கை
வெறுங்கோலைப் பிடிப்பதா
ஆண் : இது தான் விதியின் விளையாட்டு
உவ குப்தர் அன்று சொன்னதின்
உண்மையை இன்று தான் உணர்ந்தேன்
மகேந்திரா வீணில் கலங்காதே} (வசனம்)
ஆண் : கண்ணிழந்தாலென்ன…ஆ…ஆ…ஆ…ஆ…
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணிழந்தாலென்ன கடவுட்கும் என்ன
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன்
ஸத்வ குண போதன்
கண்ணில்லையோ நம்மைக் காக்கும் தயாளன்
ஆண் : ஸத்வ குண போதன்
ஸத்வ குண போதன்
ஸத்வ குண போதன்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *