உனைக் கண்டு மயங்காத பாடல் வரிகள்
| Movie | Ashok Kumar | ||
|---|---|---|---|
| படம் | அசோக்குமார் | ||
| Music | Alandur Sivasubramaniyam | ||
| Lyricist | Udumalai Narayanakavi | ||
| Singers | M. K. Thiyagaraja Bagavathar |
||
| Year | 1941 | ||
ஆண் : உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
ஆண் : வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
ஆண் : அண்டரிலே…அண்டரிலே நில மண்டலமேல்
அண்டரிலே நில மண்டலமேல் பர
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
ஆண் : தீரத்திலே தீரத்திலே
உயர் கம்பீரத்திலே
தீரத்திலே உயர் கம்பீரத்திலே
கொடை உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
ஆண் : தானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானத்திலே ஸரஸ கானத்தில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
