புது மலரின் அழகே பாடல் வரிகள்

Movie Abhimanyu
படம் அபிமன்யு
Music S. M. Subbaiah Naidu,
C. R. Subburaman
Lyricist Papanasam Sivan
Singers         U. R. Jeevarathinam
Year 1948
பெண் : புது மலரின் அழகே…….ஆனந்தம்
புது மலரின் அழகே…ஆனந்தம்
புது மண மங்கை விளையாடும் வசந்தம்
புது மலரின் அழகே……ஆனந்தம்
 
பெண் : மதுவினிலே பெறும் காதலினால் சுழல்
மதுவினிலே பெறும் காதலினால் சுழல்
வண்டுகளின் ரீங்கார கீதமுடன்
வண்டுகளின் ரீங்கார கீதமுடன்
புது மலரின் அழகே……ஆனந்தம்…
 
பெண் : தெள்ளருவி தவழ் ஓடைதனிலே
தெள்ளருவி தவழ் ஓடைதனிலே
இளம் தென்றல் இனிமையும் கூவி அழைக்கும்
தெள்ளருவி தவழ் ஓடைதனிலே
இளம் தென்றல் இனிமையும் கூவி அழைக்கும்
 
பெண் : துள்ளி தோகை விரித்தாடும் அழகும்
மயில் துள்ளி தோகை விரித்தாடும் அழகும்
மயில் துள்ளி தோகை விரித்தாடும் அழகும்
குயில் கூவோ கூவோ என்று பாடும் அழகே அழகு
 
பெண் : புது மலரின் அழகே…ஆனந்தம்
புது மண மங்கை விளையாடும் வசந்தம்
புது மலரின் அழகே……ஆனந்தம்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *