அய்யாமாரே அம்மாமாரே வாங்க பாடல் வரிகள்

Movie Abhimanyu
படம் அபிமன்யு
Music S. M. Subbaiah Naidu,
C. R. Subburaman
Lyricist Boomi Balakadas
Singers         Tiruchi Loganathan,
Friend Ramasamy,
K. V. Janaki
Year 1948
பெண் : ஏ…..அய்யாமாரே வாங்க ஓ….அம்மாமாரே வாங்க
குழு : ஏ…..அய்யாமாரே வாங்க ஓ….அம்மாமாரே வாங்க
அண்ணன்மாரே தம்பி மாரே அத்தான்மாரே வாங்க
அண்ணன்மாரே தம்பி மாரே அத்தான்மாரே வாங்க
இங்கே வாங்க சும்மா வாங்க
இங்கே வாங்க சும்மா வாங்க எல்லாம் வாங்க ஏ…
 
குழு : ஏ…..அய்யாமாரே வாங்க
 
குழு : எல்லாம் தேடுது பொய்யா உங்களை
தெருவைக் காண வாங்க கடைத் தெருவை காண வாங்க
கையால் வாங்கிடும் பொருளுக்கெல்லாம்
கைக்காசு வேண்டாம் வாங்க வாங்க வாங்க….
 
பெண் : சந்தைக் கடையல்ல இந்தக் கடையில்
சட்டிப் பானைகளை தந்தாக
விந்தைக்கிடம் தரும் வெங்கலப் பித்தளை
வெள்ளிப் பாத்திரம் தருவாங்க
 
பெண் : சந்தைக் கடையல்ல இந்தக் கடையில்
சட்டிப் பானைகளை தந்தாக
விந்தைக்கிடம் தரும் வெங்கலப் பித்தளை
வெள்ளிப் பாத்திரம் தருவாங்க
விந்தைக்கிடம் தரும் வெங்கலப் பித்தளை
வெள்ளிப் பாத்திரம் தருவாங்க
இங்கே தருவாங்க
 
பெண் : கையில்லாத கண்ணால் செய்த வேலை
கையில்லாத கண்ணால் செய்த வேலை
இதெல்லாம் கையில்லாத கண்ணால் செய்த வேலை
கடுகடுப்பில்லாம எடுக்க பிடிக்க
கடுகடுப்பில்லாம எடுக்க பிடிக்க
அடுப்பில்லாம சமைக்க வடிக்க
கையில்லாத கண்ணால் செய்த வேலை
சொய் சொய் சொய்யின்னு நல்ல தோசை வார்க்கலாம்
தின்னு ஆசை தீர்க்கலாம்
சொய் சொய் சொய்யின்னு நல்ல தோசை வார்க்கலாம்
தின்னு ஆசை தீர்க்கலாம்
 
பெண் : தோம்தாக தரிகிட தவிலடி
சொப்புக் கொடங்க வேணுமா
கொப்பரச் சட்டி வேணுமா
சொப்புக் கொடங்க வேணுமா
கொப்பரச் சட்டி வேணுமா
அண்டா குண்டா அடுக்குப் பானை
ஆனைக் கரண்டி வேணுமா……
அண்டா குண்டா அடுக்குப் பானை
ஆனைக் கரண்டி வேணுமா……
 
குழு : கையில்லாத கண்ணால் செய்த வேலை
இந்தப் பொண்ணப் பாத்தாத் தெரியுமே பின்னாலே
 
பெண் : இந்தக் கடைதனிலே
பழைய கந்தைத் துணி குடுத்தா
இந்தக் கடைதனிலே
பழைய கந்தைத் துணி குடுத்தா
 
பெண் : தங்கச் சரிகையிலே
தகட்டு சால்வை தருவாங்க
தங்கச் சரிகையிலே
தகட்டு சால்வை தருவாங்க
தங்கச் சரிகையிலே
தகட்டு சால்வை தருவாங்க
 
பெண் : நூலில்லாம நெசவு செய்த வேலை
எல்லாம் நூலில்லாம நெசவு செய்த வேலை
நோட்டம் பாத்து போட்டுப் பாருங்க மேலே
தெரியும் பின்னாலே தெரியும் பின்னாலே
நூலில்லாம நெசவு செய்த வேலை
 
பெண் : வாங்க மாப்பிள்ளை வாங்க
ஆண் : என்னடா இழுக்குது
ஆண் : இல்லைங்க அழைக்குது ஹே….
 
பெண் : பாருங்க நூலில்லாம நெசவு செய்த வேலை
நோட்டம் பாத்து போட்டுப் பாருங்க மேலே
நூலில்லாம நெசவு செய்த வேலை
 
ஆண் : பாவு நூலில்லாம மேவி நெசவு செய்த
பட்டுப் பீதாம்பரத்தைப் பாரடா பாரடா பாரடா
ஆனை விலை கொடுத்து ஆடையாக மேலே போட்டா
அவளும் மதிப்பா நல்லா ஜோராடா ஜோராடா ஜோராடா
 
ஆண் : கல்லு வணங்கினாலும் சொல்லு வணங்கிடாத
கம்பீர துரியோதனன் பிள்ளையே பிள்ளையே பிள்ளையே
நல்லது உங்களுக்கு நான் சும்மா வாங்கித் தாரேன்
இல்லை இதை அடிப்பேன்
கொள்ளையே கொள்ளையே கொள்ளையே
 
பெண் : வீசும் மணமகனே வில் வளைக்கும் மம்முதனே
ஆசை பெருக்குதய்யா அன்பிருந்தா போதுமைய்யா
காசு பணம் வேண்டாமைய்யா……ஆ…….
ராசாத்தி ராசா கையில தாரேன்
கழுத்துல போட்டுக்குங்க
ராசாத்தி ராசா கையில தாரேன்
கழுத்துல போட்டுக்குங்க
 
ஆண் : ஏ…..எப்பிடிடா…..
ஆண் : சபாஷ்……
 
பெண் : மந்திரத்தாலே மருந்தாலே
இங்கே தந்திரத்தாலே கிழவிகளை
மந்திரத்தாலே மருந்தாலே
இங்கே தந்திரத்தாலே கிழவிகளை
 
பெண் : சுந்தர மோகினி மேனகைப் போலவே
தோணும் குமரியா செய்வாங்க
சுந்தர மோகினி மேனகைப் போலவே
தோணும் குமரியா செய்வாங்க
 
பெண் : சீவி சிணுக்கெடடி வங்காரு
நல்ல சித்திரம் போல் மையிடடி செங்கமலம்
சீவி சிணுக்கெடடி வங்காரு
நல்ல சித்திரம் போல் மையிடடி செங்கமலம்
 
பெண் : வவுத்துல ஒருத்தன் வாயில் தீட்டடி
புதுசா வவுத்துல ஒருத்தன் வாயில் தீட்டடி
கம்மலோடு ஜிமிக்கி எடுத்து மாட்டடி
காதுல கம்மலோடு ஜிமிக்கி எடுத்து மாட்டடி
 
பெண் : சீவி சிணுக்கெடடி வங்காரு
நல்ல சித்திரம் போல் மையிடடி செங்கமலம்
 
பெண் : என்னய்யா உத்துத்துப் பாக்குற
உனக்கென்ன வேணுமுன்னு கேக்குறே
என்னய்யா உத்துத்துப் பாக்குற
உனக்கென்ன வேணுமுன்னு கேக்குறே
 
பெண் : அட உன்னையும் குமாரனா ஆக்குறேன்
இந்த உத்தமிய ஜோடி சேக்குறேன்
உன்னையும் குமாரனா ஆக்குறேன்
இந்த உத்தமிய ஜோடி சேக்குறேன்
 
பெண் : தாடியப் பிச்சி எறிஞ்சிட்டா
மீசைதான் கறுப்பாகும் சாயமிட்டா…..

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *