கலங்காதிரு மனமே பாடல் வரிகள்

Movie Kanniyin Kathali
படம் கன்னியின் காதலி
Music S. M. Subbaih Naidu
Lyricist Kannadasan
Singers         K. V. Janaki
Year 1949
பெண் : கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நினைவாகும்
ஒரு தினமே ஒரு தினமே
 
பெண் : கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
 
பெண் : கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கடினப்படாமல் ஏதும் கைக்கு வராது
கஷ்டப்படுவார் தம்மைக் கை நழுவாது
கஷ்டப்படுவார் தம்மைக் கை நழுவாது
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது
அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது
உனக்கு ஆகாததேது
 
பெண் : கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
 
பெண் : ஆண் வாடை கூடாதென்ற
அல்லியும் ஒரு நாள்
ஆண் வாடை கூடாதென்ற
அல்லியும் ஒரு நாள்
அர்ச்சுனன் வலைதனில்
அர்ச்சுனன் வலைதனில்
வீழ்ந்தனள் சரியாய்
 
பெண் : கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
 
பெண் : பகட்டுக்காக உம்மைப்
பார்க்கவே மறுத்தாலும்
பகட்டுக்காக உம்மைப்
பார்க்கவே மறுத்தாலும்
பருவக் காலம் அவனைப்
பாடாய்ப் படுத்தி விடும்
பருவக் காலம் அவனைப்
பாடாய்ப் படுத்தி விடும்
 
பெண் : அடுத்த கணம் உன் மேல்
ஆசையும் வைப்பாள்
அடுத்த கணம் உன் மேல்
ஆசையும் வைப்பாள்
ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள்
ஆஹாஹா என்று முத்தமும் கொடுப்பாள்
 
பெண் : கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே
உன் கனவெல்லாம் நினைவாகும்
ஒரு தினமே ஒரு தினமே
 
பெண் : கலங்காதிரு மனமே
நீ கலங்காதிரு மனமே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Tags: Kanniyin Kathali,  Kanniyin Kathali Songs Lyrics,  Kanniyin Kathali Lyrics,  Kanniyin Kathali Lyrics in Tamil,  Kanniyin Kathali Tamil Lyrics,  கன்னியின் காதலி,  கன்னியின் காதலி பாடல் வரிகள்,  கன்னியின் காதலி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *