பாட்டுக்கொரு புலவன் பாரதியடா பாடல் வரிகள்
Movie | Paithiyakkaran | ||
---|---|---|---|
படம் | பைத்தியக்காரன் | ||
Music | M. S. Gnanamani, C. R. Subburaman |
||
Lyricist | Ambikapathi | ||
Singers | P. Leela | ||
Year | 1947 |
பெண் : பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
அவன பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
அவன பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா…
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா…..அந்த
கிறுக்கில் உளறும் மொழி பொறுப்பாயடா
பெண் : குயிலும் கிளியும் பாட்டில் கூவுமேயடா
குயிலும் கிளியும் பாட்டில் கூவுமேயடா
மயில் குதித்து குதித்து நடமாடுமேயடா
வெயிலும் மழையும் அதில் தோன்றுமேயடா
வெயிலும் மழையும் அதில் தோன்றுமேயடா
மலர் விரிந்து விரிந்து மணம் வீசுமேயடா
மலர் விரிந்து விரிந்து மணம் வீசுமேயடா
பெண் : உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா
உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா
மிக்க ஊக்கம் பிறக்கும் ஒரு பாட்டிலேயடா
கள்ளின் வெறி கொள்ளுமோர் பாட்டிலேயடா
கள்ளின் வெறி கொள்ளுமோர் பாட்டிலேயடா
ஊற்றாய் கண்ணீர் சொறிந்திடுமோர் பாட்டிலேயடா
உள்ளம் தெளியும் ஒரு பாட்டிலேயடா
பெண் : பெண்டு பிள்ளைகளின் பெருமை
பெரிதறிந்தேனடா…ஆ…ஆ…ஆ…ஆ…
பெண்டு பிள்ளைகளின் பெருமை
பெரிதறிந்தேனடா
சண்டைகள் செய்ததெல்லாம் எண்ணித்
தலை கவிழ்ந்தேனடா…
சண்டைகள் செய்ததெல்லாம் எண்ணித்
தலை கவிழ்ந்தேனடா
பெண் : சுதந்திரப் பாட்டில் உள்ளம்
துடிதுடிக்குதடா…ஆ…ஆ…
சுதந்திரப் பாட்டில் உள்ளம்
துடிதுடிக்குதடா
பதமெழும்புதடா
கையும் படபடக்குதடா
பதமெழும்புதடா….
கையும் படபடக்குதடா
பெண் : வந்தே மாதரத்தைப் பாடவே
வாய் திறந்தவுடன்…
வந்தே மாதரத்தைப் பாடவே
வாய் திறந்தவுடன்
சந்தேகமில்லை
சந்தேகமில்லை
சந்தேகமில்லை
சந்தேகமில்லை
ஒரு புது சக்தி தோன்றுதடா
ஒரு புது சக்தி தோன்றுதடா