ஜீவ ஒளியாக பாடல் வரிகள்

Movie Paithiyakkaran
படம் பைத்தியக்காரன்
Music M. S. Gnanamani,
C. R. Subburaman
Lyricist Ambikapathi
Singers         T. A. Mathuram, M. G. R
Year 1947
பெண் : ஆ…ஆ…அ…அ…ஆ…ஆ
அ…அ…ஆ… அ…அ…ஆ…
ஜீவ ஒளியாக
ஜீவ ஒளியாக ஜீவ ஒளியாக
ஜெகமீதே வாழ்வோம்
ஜீவ ஒளியாக ஜீவ ஒளியாக
ஜெகமீதே வாழ்வோம்
சுபதினமே இனி நலமே விட
வினை போக்கிடுமே
சுபதினமே இனி நலமே விட
வினை போக்கிடுமே
 
ஆண் : குயில் போலும் இசை பாடும்
குலமா மணியே
குலம் வாழும் நிலை காணும்
எனதாருயிரே
குயில் போலும் இசை பாடும்
குலமா மணியே
குலம் வாழும் நிலை காணும்
எனதாருயிரே
 
பெண் : மத ஜாதி விதியில்லா
மணமாகுமே
எந்நாளும் பொதுவான
முறையாம் ஈதே
மத ஜாதி விதியில்லா
மணமாகுமே
எந்நாளும் பொதுவான
முறையாம் ஈதே
இன்ப வாழ்வாமே
 
ஆண் : காணும் கண் மேவும்
ஒளி போலும்
கலந்தோம் நாமே
 
ஆண் : கலைசேர் மயிலே
 
பெண் : கருமாமுகிலே
 
ஆண் : கலைசேர் மயிலே
 
பெண் : கருமாமுகிலே
 
இருவர் : புதிதான மண வாழ்வில்
புகுவோம் நாமே
சுபதினமே இனி நலமே விட
வினை போக்கிடுமே
 
பெண் : மனிதர் வாழ நன்மார்க்கமிதே
 
ஆண் : புனிதமிகும் காதல் தானே
 
பெண் : மனிதர் வாழ நன்மார்க்கமிதே
 
ஆண் : புனிதமிகும் காதல் தானே
 
இருவர் : தனித்தொரு போதும் வாழா உண்மை
கருத்துள்ளதாம் காதல் உண்மை
கருத்துள்ளதாம் காதல்…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *