ஆசையாக பேசிப்பேசி பாடல் வரிகள்

Movie Paithiyakkaran
படம் பைத்தியக்காரன்
Music M. S. Gnanamani,
C. R. Subburaman
Lyricist Ambikapathi
Singers         T. A. Mathuram,
N. S. Krishnan
Year 1947
பெண் : ஆசையாக பேசிப்பேசி
ஆளை ஏய்க்காதே மாமா
காசே பெரிசா நெனைச்சி
மனசே கஷ்டப்படுத்தாதே ஆமா
 
ஆண் : பணத்தை எண்ணிக்
கணக்குப் பாக்கும்
மனுஷன் நானோடி பெண்ணே
குணத்துக்காக எதையும் செய்யும்
குமணன் அல்லோடி கண்ணே
 
பெண் : போடாத நகை என்ன
போட்டே யாரும்
போடாத நகை என்ன
போட்டே யாரும்
இந்தப் பொய் வார்த்தை சொன்னா
பொறுக்கவே மாட்டேன்
பாடகம் தண்டையோடு
கொலுசு பீலிப்
பழசையே மாத்தி என்ன
பண்ணினே புதிசு
காதிலேதாவதும் உண்டா
வைரமுண்டா கண்டதுண்டா
மோட்டார் கார்தனிலே போகிறதை
கனவில் யார் கண்டா
நாடகம் சினிமாவும் உண்டா
போனதுண்டா
ஒரு நாளாவதுங்களுடன்
நான் வந்ததுண்டா
போடாத நகை என்ன
போட்டே யாரும்
 
ஆண் : விவரம் புரிஞ்சுக் கொள்ளணும்
மனுஷன் சொன்ன வேலையத்த
பணக்காரப் பிள்ளைங்க போல
காரியம் இல்லாமேத
நேரம் போக்காதென்னா
விவரம் புரிஞ்சுக் கொள்ளணும்
மனுஷன் சொன்ன வேலையத்த
பணக்காரப் பிள்ளைங்க போல
காரியம் இல்லாமேத
நேரம் போக்காதென்னா
 
ஆண் : சிலுக்குப் புடவை கேக்குதா
இல்லா உடம்பு குலுக்கி நடக்கேங்குதா
காதிரண்டும் சீமைக் கமலம் கேக்குதா
போடாப்போனா செவிடாப் போறேனுங்குதா
தாலியுள்ள கழுத்தட்டிக்கை இல்லாட்டி
சுளுக்கிக்கிறேனுங்குதா
காப்பில்லாக் கை சோத்தை
ஆக்கமாட்டேங்குதா
காசு கொடுத்து வாங்கி
ஆசையொடு மூக்கில்
பேசரி போடாட்டி
வாசம் புடிக்காதா
 
ஆண் : விவரம் புரிஞ்சுக் கொள்ளணும்
மனுஷன் சொன்ன வேலையத்த
பணக்காரப் பிள்ளைங்க போல
காரியம் இல்லாமேத
நேரம் போக்காதென்னா
 
ஆண் : நவநாகரீகத்திலே
நல்லதைக் கொள்ளோணும்
நாலு சாத்திரம்
புராணம் படிக்கோணும்
தவறாமல் தாய்மொழி
தமிழை வளக்கோணும்
தருமத்தை ஒருநாளும்
மறவாதிருக்கோணும்
 
ஆண் : விவரம் புரிஞ்சுக் கொள்ளணும்
மனுஷன் சொன்ன வேலையத்த
பணக்காரப் பிள்ளைங்க போல
காரியம் இல்லாமேத
நேரம் போக்காதென்னா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *