விடுதலை விடுதலை விடுதலை பாடல் வரிகள்
| Movie | Naam Iruvar | ||
|---|---|---|---|
| படம் | நாம் இருவர் | ||
| Music | R. Sudarsanam | ||
| Lyricist | Mahakavi Subramanya Bharathiyaar | ||
| Singers | T. R. Mahalingam | ||
| Year | 1947 | ||
ஆண் : விடுதலை விடுதலை விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பறவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை
விடுதலை விடுதலை விடுதலை
ஆண் : திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே
ஆண் : ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்
ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே…
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே
விடுதலை விடுதலை விடுதலை
