அகிலாசநேசன் எங்கள் ராஜனே பாடல் வரிகள்

Movie Harichandra
படம் ஹரிச்சந்திரா
Music S. V. Venkataraman
Lyricist C. A. Lakshmana Das
Singers         P. U. Chinnappa
Year 1944
ஆண் : அகிலாசநேசன் எங்கள் ராஜனே
அகிலாசநேசன் எங்கள் ராஜனே
அகிலாசநேசன் எங்கள் ராஜனே
 
ஆண் குழு : பொய் பேசா ஆதித்யன்
மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன்
மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
 
பெண் : மகிதளமே மழையது
பொழிவதேவர்தம் ஈகையால்
மழையது பொழிவதேவர்தம்
ஈகையால்
 
ஆண் : அவர் பேர் கேள்
 
ஆண் குழு : ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்
 
ஆண் : நாயகன் எனக்கு நாமெல்லாம் ஒண்ணா
 
ஆண் குழு : நல்லா செஞ்சா பொல்லாப்பில்லே
நாத்து நடுவேனா நாரணன் சொன்னார்
நம் நாடெல்லாம் மும்மாரி தான்
நாட்டை ஆளும் ராஜனார்
நாட்டை ஆளும் ராஜனார்
 
ஆண் குழு : அவர் பேர் கேள்
ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்
 
ஆண் : அநியாயமே புரியார் தனியாய்
புசித்தறியார் அவர்
அநியாயமே புரியார் தினம்
தனியாய் புசித்தறியார்
அவர் அரசாட்சியில் அருமை
சொல்லவா
வீர பெரியார்க்கொரு பிரபுவும்
அல்லவா
 
ஆண் குழு : அவர் பேர் கேள் ஆதித்யன்
மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்
 
ஆண் : ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..
மன்னனது பேரைச்சொல்லியே
மண் வாழ்வுக்கு மதிப்பு செய்தார்
மன்னனது பேரைச்சொல்லியே
மண் வாழ்வுக்கு மதிப்பு செய்தார்
மண்ணுலக வாழ்வுக்கொசந்த
அமுதவாண்டம் மதிப்பு எல்லாம்
மண்ணுலக வாழ்வுக்கொசந்த
அமுதவாண்டம் மதிப்பு எல்லாம்
இன்னொருத்தர் இல்லை அவருக்கு
ஈடு சொல்லவே
 
ஆண் குழு : அவர் பேர் கேள் ஆதித்யன்
மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்
 
ஆண் : தன்னுயிரைப்போல
மண்ணுயிரைக்காக்கும்
 
ஆண் குழு : ஆஹா சத்திய மன்னவன்
 
ஆண் : தன்னை மனதுக்குள்
எண்ணியப்படியே செய்தால்
 
ஆண் குழு : மகிதளத்தவனோடு
 
ஆண் : பொன்னுலகோ திருவனம் அத்தனையும்
பொங்கி விடச்செய்வார்
அவர் பேர் கேள்
 
ஆண் குழு : ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
பொய் பேசா ஆதித்யன் மரபில்
பிறந்த ஹரிச்சந்திரன்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *