சத்ய நீதி மாறா இம்மாதை பாடல் வரிகள்
| Movie | Harichandra | ||
|---|---|---|---|
| படம் | ஹரிச்சந்திரா | ||
| Music | S. V. Venkataraman | ||
| Lyricist | C. A. Lakshmana Das | ||
| Singers | P. U. Chinnappa | ||
| Year | 1944 | ||
ஆண் : சத்ய நீதி மாறா இம்மாதை
வாங்குவார் உண்டோ
சத்ய நீதி மாறா இம்மாதை
வாங்குவார் உண்டோ
பொருளன்றி வாங்குவார் உண்டோ
யாரேனும் வாங்குவார் உண்டோ
ஆண் : நித்ய மேவும் வேலையே
நினைவாகவே செய்வாள்
நித்ய மேவும் வேலையே
நினைவாகவே செய்வாள்
நிந்தையேதுமே பேசாள்
நிந்தையேதுமே பேசா மாதை
வாங்குவார் உண்டோ
பொருளன்றி வாங்குவார் உண்டோ
யாரேனும் வாங்குவார் உண்டோ
ஆண் : கலைஞானியான முனியின்
கடன் தீர நான் இவளை
கலைஞானியான முனியின்
கடன் தீர நான் இவளை
கலைஞானியான முனியின்
கடன் தீர நான் இவளை
விலை கூறினேன் நானே
விலை கூறினேன் இவளை
விலை கூறினேன்
பொருள் தந்து வாங்குவார் உண்டோ
யாரேனும் வாங்குவார் உண்டோ
