எங்க அண்ணன் அன்ப அள்ளி பாடல் வரிகள்

Movie Namma Veettu Pillai
படம் நம்ம வீட்டுப் பிள்ளை
Music D. Imman
Lyrics Vignesh Shivan
Singers         Nakash Aziz,
Sunidhi Chauhan
Year 2019

சிவாஜி கணேசன் வசனம் :
என் தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன்
அது அழுதா அய்யய்யோ
என்னால தாங்கவே முடியாது
நான் கண்ண தொறந்திருக்கும் போதெல்லாம்
அது என் முன்னாலே நிக்கணும்
கண்ண மூடி இருந்தேன்னா
என் கனவுலகூட கலகலன்னு
சிரிச்சு விளையாடனும்

பெண் : வா வா டியர்ரு பிரதர்ரு
பார்த்தா செதறும் சுகரு
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
அதுவே தனி பவர்ரு

குழு : எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

குழு : எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

ஆண் : என் வீட்டு தலைவி
இந்த ஜில்லாவோட அழகி
அண்ணன்காரன் அன்றாடம் நனையும்
அன்பான அருவி

குழு : என் தங்கை மை தங்கை
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க

ஆண் : என் ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம்
அணிலா இருப்பா
நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா
உடனே எடுப்பா

பெண் : கலகலன்னு அவன் இருப்பதும்
கலர் கலரா அவன் சிரிப்பதும்
பாத்தாலே போதும்

குழு : எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

குழு : எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே

ஆண் : என் தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான்
என் தங்கைதான் என் உயிரு
என் உலகமே அதுதான் (வசனம்)

பெண் : உன்ன விட எங்க அண்ணனுங்கதான்
எனக்கு முக்கியம்
நீ எனக்கு கொடுத்த வாழ்க்கைய விட
என் அண்ணன்னுகளோட பாசம்தான்டா
எனக்கு முக்கியம் (வசனம்)

ஆண் : அடுத்த ஜென்மம்கூட
அண்ணன் உனக்கு நான்தான்
அக்ரீமெண்ட போட்டு வச்சுக்கலாம்

பெண் : இந்த ஜென்மம் அண்ணன்
அடுத்த ஜென்மம் அப்பன்
மாத்தி மாத்தி பொறந்து
வாழ்ந்துக்கலாம்

ஆண் : சொந்த பந்தம் பாசம் எல்லாம்
காணா போச்சு எங்கே
பெண் : பாசமலர் பார்ட்  2-வத்தான்
பாத்துகோங்க இங்க

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *