உன் கூடவே பொறக்கணும் பாடல் வரிகள்

Movie Namma Veettu Pillai
படம் நம்ம வீட்டுப் பிள்ளை
Music D. Imman
Lyrics Gkb
Singers         Shashaa Tirupati
Year 2019
பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

பெண் : எனக்காக என் நிழலாக
நீ கூடவே நின்னாயே
ஈ எறும்பு என அண்டாம
என கண்ணுல வச்சாயே

பெண் : நான் போகும் பாதை யாவும்
நீ அருகினில் இருப்பாயே
நான் கேட்கவும் கூட வேணும்
நீ எல்லாம் செய்வாயே

பெண் : தாய் மடிக்கு தாயும்
என் சேயும் அட எல்லாம் நீ தானே
கண் கலங்கி கேட்டா அட நீயும்
உன் உசுர தருவாயே

பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

பெண் : அடிகடி வந்து கரைய
மோதும் அலைய போல ஆன
உன்ன நானும் பிரியும் போதும்
வத்தி தானே போவ
விழியோரம் உருளுது நீரு
இது அன்பால் வளர்ந்த காடு
இது எல்லாம் வெலகுற நேரம்
நீ ஒருத்தன் மட்டும் போதும்

பெண் : எல்லாத்துக்கும் ஒத்த தாயி
தந்தான் சாமி
சாவும் மட்டும் நீதான் எனக்கு
ரெண்டாம் தாயி

பெண் : இது எல்லாம் வரம்தானா
உன் மகளும் நானே
மறுஜென்மம் கெடைச்சாலும்
என் மகனும் நீயே

பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே

பெண் : உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே ஹே…..

பெண் : உன் கூடவே…….பொறக்கணும்
உன் கூடவே……….பொறக்கணும்……ம்ம்ம்…….

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *