ஈச்சி எலுமிச்சி பாடல் வரிகள் 

Movie Name  Taj Mahal
திரைப்பட பெயர் தாஜ் மஹால்
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Manoj, Arundhathi and Raqeeb Alam
Year 1999

ஆண் : மாயே மாயே யோ
மாயே மாயே யோ… (3)

பெண் : மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோயோ யோ

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

பெண் : மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ

பெண் : ஆகாயம் பூவாளி
அதுபாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே

ஆண் : சிறுதண்ணி தோளோடும்
மாறோடும் விழுந்து
தொடாத எடமும் தொடுதே

ஆண் : ஒத்த மழத்துளி
பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே
பெண் : பூத்தும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

ஆண் : மச்ச கன்னி ஒன்ன காங்கலையே
ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே
பெண் : பாட்டு சத்தம் கேக்கலையே
அந்தி பகல் ஏதும் பாக்கலையே

ஆண் : மஞ்ச கிழங்கே
ஒன்ன பாத்துப்புட்டேன்
மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்
பெண் : நெஞ்சு குழிகுள்ள
வேர்த்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

பெண் : தொழுவோடு சேராத
பொலிகாள கூட
கொடைய பாத்து மெரளும்

ஆண் : கொடகண்டு மெரளாத
கோடாளி காள
தாவணி பாத்து மெரளும்

ஆண் : பாசி மணி ரெண்டு கோக்கயில
பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீயவெச்சு போனவளே

பெண் : ஆஆ…ஆஅ…ஆஆ….
ஆஆ….ஆஆ…ஆஅ….

ஆண் : தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டைய போல உதட்டில்
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி

பெண் : ஆஆ…ஆஅ…ஆஆ….
ஆஆ….ஆஆ…ஆஅ….

ஆண் : கையில் கைய வெச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

ஆண் : மாயே…மாயே யோ…(4)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Taj Mahal, Taj Mahal Songs Lyrics, Taj Mahal Lyrics, Taj Mahal Lyrics in Tamil, Taj Mahal Tamil Lyrics, தாஜ் மஹால், தாஜ் மஹால் பாடல் வரிகள், தாஜ் மஹால் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *