யார் செய்த பாவமோ பாடல் வரிகள்

Movie Jothi
படம் ஜோதி
Music Harshavardhan
Rameshwar
Lyricist Karthik Netha
Singers         K. J. Yesudas
Year 2022
ஆண் : யார் செய்த பாவமோ
ஏன் இந்த கோலமோ
கருவறை தேடி போகுதே அருள்ஜோதியே
வலிகளை வாங்கி போகுதே
 
ஆண் : காரணம் தேடியே
காரியம் போகுதே
கவலையில் ஏங்கி ஏங்கியே குலசாமியே
ஒரு வழி பாதை போகுதே
 
ஆண் : மனுஷங்க வேணாமப்பா
மயக்கமும் வேணாமப்பா
சுயநலம் ஏதும் இல்லா
உயரத்தில் சேர்ப்பாய்யப்பா
தொடங்கிய வீட்டில் சேர பாசம் போகுதே
 
ஆண் : யார் செய்த பாவமோ
ஏன் இந்த கோலமோ
கருவறை தேடி போகுதே குலசாமியே
வலிகளை மீறி போகுதே
 
ஆண் : தகப்பனுக்கு ஈடே இல்லை
உனக்கு அது புரிந்து போனதே
மிருகத்தின் தாலி இன்று
அறுந்தது கழுத்தின் ஓரமே
 
ஆண் : அடிகளை வாங்கி கொண்டு
வலிகளில் பாடம் கண்டு
ஒரு மனம் ஞானி ஆனதே இதோ
அருளான ஜோதியே அழியாது நீதியே
 
ஆண் : அடி வினை விதைத்தவன்
வினை அறுக்கணும்
கருணை சுரக்கும் உலகம் இருக்கு
போவாய் கண்மணியே
 
ஆண் : காரியம் தீர்ந்ததே
காரணம் புரிந்ததே
சலனங்கள் யாவும் ஓய்ந்ததே இவள் மடியிலே
உலகமே குழந்தை ஆனதே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *