என்னடியே என்னடியே பாடல் வரிகள்

Movie Yenni Thuniga
படம் எண்ணித்துணிக
Music Sam CS
Lyricist Karthik Netha
Singers         Haricharan,
Srinisha Jayaseelan
Year 2022
ஆண் : என்னடியே என்னடியே
என்ன நீ பிச்சு பிச்சு பிச்சு பிச்சு
நெஞ்சில் வச்சு கோர்க்குற
 
ஆண் : பிச்சு பிச்சு பிச்சு பிச்சு
பிச்சு பிச்சு பிச்சு பிச்சு
 
ஆண் : என்னடியே என்னடியே
என்ன நீ பிச்சு பிச்சு
நெஞ்சில் வச்சு கோர்க்குற
மாயுறேன் உன்னில் மீளாம
என்னடியே சொல்லடியே
என்ன ஏன் நிக்க வச்சி ரெக்க தச்சி வீசுற
தாவுற வானம் போதாம
 
பெண் : அடை ஒற்றை நூலில் பிம்பங்கள் ஆடும்
வித்தை காலம் ஆரம்பமே
ஆண் : நான் சட்டை போடும் நேரத்துக்குள்ளே
என் ஆசை சுற்றும் ஆகாசமே
 
பெண் : என்னை உந்தி தள்ளி
உன் மூச்சில் போர்த்தும்
கண்ணா உந்தன் காருண்யமே
 
ஆண் : உயிர் சிந்தி கொண்டு
உன்னோடு பூக்கும்
அன்பே எந்தன் ஆரண்யமே
 
பெண் : என்னடியே என்னடியே
என்ன நீ பிச்சு பிச்சு பிச்சு பிச்சு
நெஞ்சில் வச்சு கோர்க்குற
 
ஆண் : கானல் மேலே பறவைய போல் அலஞ்சேன்
என் சட்டை காம்பில் பொன்
காதல் கொடுத்தாய்
என் காதல் தாகம் தீர்ந்ததே
 
பெண் : நூலில் ஆடும் மழை துளி போல் இருந்தேன்
காதல் குடுத்தாய் உயிர் வெள்ளமானதே
 
ஆண் : நெற்றிமுடி
பெண் : முட்ட விழி
ஆண் : கற்றை நிறம்
பெண் : தெற்றுப்பல்லு
ஆண் : பிஞ்சுமுகம்
பெண் : நெஞ்சுக்குள்ள முட்டி நிக்குதே
 
ஆண் : எத்தனயோ
பெண் : காலம் தள்ளி
ஆண் : விழுகின்ற
பெண் : அன்பின் ஒலி
ஆண் : காலத்துக்கும்
பெண் : போதுமென்று காதல் நிக்குதே
 
ஆண் : என்னயேண்டி சாய்க்கிற
பெண் : என்னவனே என்னவனே
என்ன நீ பிச்சு பிச்சு
உன்னில் வச்சு கோர்க்குற
மாயுறேன் உன்னில் மீளாம
 
ஆண் : வெட்டி போட்ட விண்மீன்கள் இன்று
என் சட்டை காம்பில் பூக்கின்றதே
பெண் : அட சண்டை போட்ட வார்த்தைகள் இன்று
சட்டை செய்து பார்க்கின்றதே
 
ஆண் : நம்மை சுற்றி பார்க்கும் காதல்கள் எல்லாம்
சுற்றி போடும் பேருள்ளமே
பெண் : என்னை கட்டி போட்ட கண்ணீரை தின்னும்
கண்ண உந்தன் பேரின்பமே..ஆஅ..
 
ஆண் : என்னடியே என்னடியே
உன்னை எந்தன்
நெஞ்சில் வச்சு பாக்குறேன்
என்னடியே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *