ஒரு பொய்யாவது பாடல் வரிகள் 

Movie Name  Jodi
திரைப்பட பெயர் ஜோடி
Music A.R. Rahman
Lyricist Vairamuthu
Singer Hariharan
Year 1999

ஆண் : { ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன் } (3)

ஆண் : பூக்களில் உன்னால்
சத்தம் அடி மௌனத்தில்
உன்னால் யுத்தம் இதைத்
தாங்குமா என் நெஞ்சம்….
இதைத் தாங்குமா என் நெஞ்சம்

ஆண் : உண்மையும் பொய்மையும்
பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்
பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும்
ஒன்றுதான்

ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும்
கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்

ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்

ஆண் : இரவினைத் திரட்டி
ஓ… ஆ… இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள்
செய்தாரோ…..

ஆண் : விண்மீன் விண்மீன்
கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கைரேகை செய்தானோ….

ஆண் : வாடைக் காற்று
பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்
தோள் செய்தானோ ஆனால்
பெண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ காதல்
கண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ

ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்
{ அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் } (2)
நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்
{ அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் } (2)
சொல்லில் அந்த சொல்லில்
{ உயிா் வாழ்வேன் } (3)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Jodi, Jodi Songs Lyrics, Jodi Lyrics, Jodi Lyrics in Tamil, Jodi Tamil Lyrics, ஜோடி, ஜோடி பாடல் வரிகள், ஜோடி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *