வெள்ளி மலரே பாடல் வரிகள் 

Movie Name  Jodi
திரைப்பட பெயர் ஜோடி
Music A.R. Rahman
Lyricist Vairamuthu
Singer S.P. Balasubrahmanyam and Mahalakshmi Iyer
Year 1999

குழு : ………………………………

பெண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி
மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்
உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ

ஆண் : { இளந்தளிரே
இளந்தளிரே வெள்ளி
மலரன்று இயற்றிய
தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு } (2)

பெண் : ஓ….ஓ….ஓ…

ஆண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே

பெண் : ………………………………

ஆண் : மின்னொளியில்
மலா்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலா்வன
காதல் பூக்கள் நெஞ்சுடைந்த
பூவே நில்

பெண் : ஏ வெட்கங்கெட்ட
தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும்
பேதமில்லை ஆடைகொள்ளப்
பாா்ப்பீா் ஐயோ தள்ளி நில் நில்

ஆண் : வான்விட்டு வாராய்
சிறகுள்ள நிலவே தேன்விட்டுப்
பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிா்த்தேன்
சொட்டுதே சொட்டுதே

பெண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி
மலரே வெள்ளி மலரே

பெண் : வனங்களில் பூந்தளிா்
தேடும்போதும் நதிகளில்
நீா்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்

ஆண் : தொலைவினில்
தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல
ஓடிப்போகும் நீயும் மேகம்தானா
நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்

பெண் : மழையிலும் கூவும்
மரகதக் குயில் நான் இரவிலும்
அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு
உயிா் நான்

ஆண் : வெள்ளி மலரே
வெள்ளி மலரே

பெண் : நேற்றுவரை நீ நெடுவனம்
கண்டாய் ஒற்றைக்காலில்
உயரத்தில் நின்றாய் மஞ்சள்
மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும்
சுமந்தாய் இத்தனை தவங்கள்
ஏன்தான் செய்தாயோ தேன்சிதறும்
மன்மத மலரே இன்றே சொல்வாயோ

ஆண் : இளந்தளிரே
இளந்தளிரே வெள்ளி
மலரன்று இயற்றிய
தவம் எதற்கு பெண்மங்கை
உந்தன் கூந்தல் சோ்வதற்கு
வெள்ளி மலரே வெள்ளி மலரே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Jodi, Jodi Songs Lyrics, Jodi Lyrics, Jodi Lyrics in Tamil, Jodi Tamil Lyrics, ஜோடி, ஜோடி பாடல் வரிகள், ஜோடி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *