கை தட்டி தட்டி பாடல் வரிகள் 

Movie Name  Jodi
திரைப்பட பெயர் ஜோடி
Music A.R. Rahman
Lyricist Vairamuthu
Singer Srinivas and Timmy
Year 1999

ஆண் : கை தட்டி தட்டி
அழைத்தாளே என் மனதை
தொட்டு தொட்டு திறந்தாளே
என் உயிரை மெல்ல துளைத்து
நுழைந்தாளே ஜீவன் கலந்தாளே
அந்த தேன் குயிலே

குழு : தரரம்பம் தரரம்பம்
தரரம்பம் உன் ஆரம்பம்
இன்பம் இன்பம் பெண்
எப்போதும் சுகமான துன்பம்
உன் வான் எங்கும் அவளின்
பின்பம்

ஆண் : ஐந்து நிமிடங்கள்
அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை
வெல்லும்

குழு : தரரம்பம் தரரம்பம்
தரரம்பம் உன் ஆரம்பம்
இன்பம் இன்பம்

ஆண் : ரத்தினத்து தேர்
ஆனால் என் மனசுக்குள்
சத்தம் இடும் பூவானால்
என் பருவத்தை பயிர்
செய்யும் நீர் ஆனால்

ஆண் : என் நெஞ்ச குளத்தில்
பொன் கல்லை எறிந்தால்
அலை அடங்கும் முன்
நெஞ்சத்தில் குதித்தால்

ஆண் : விழியால் நெஞ்சுடைத்து
விட்டால் ஸ்பரிசங்களால் பின்
இணைத்துவிட்டால்

குழு : தரரம்பம் தரரம்பம்
தரரம்பம் உன் ஆரம்பம்
இன்பம் இன்பம் பெண்
எப்போதும் சுகமான துன்பம்
உன் வான் எங்கும் அவளின்
பின்பம்

ஆண் : ஐந்து நிமிடங்கள்
அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை
வெல்லும்

குழு : தரரம்பம் தரரம்பம்
தரரம்பம் உன் ஆரம்பம்
இன்பம் இன்பம்

குழு : தரரம்பம் தரரம்பம்
தரரம்பம் தர ரம் பம்பம்பம்
பம்பம்பம் தரரம்பம் தரரம்பம்
தரரம்பம் தர ரம் பம்பம்பம்
பம்பம்பம்

ஆண் : பால்வண்ண நிலவெடுத்து
பாற்கடலில் பலமுறை சலவை
செய்து பெண்ணுருவாய்
பிறந்தவள் அவள்தானோ

ஆண் : என் கவிதைகளில்
கண் மலர்ந்தவளோ என்
மௌனங்களை மொழி
பெயர்த்தவளோ அழகை
தத்தெடுத்தவளோ என்
உயிர் மலரை தத்தரித்தவளோ

குழு : தரரம்பம் தரரம்பம்
தரரம்பம் உன் ஆரம்பம்
இன்பம் இன்பம் பெண்
எப்போதும் சுகமான துன்பம்
உன் வான் எங்கும் அவளின்
பின்பம்

ஆண் : ஐந்து நிமிடங்கள்
அவளோடு வாழ்ந்தால்
வாழ்வு மரணத்தை
வெல்லும்

குழு : தரரம்பம் தரரம்பம்
தரரம்பம் உன் ஆரம்பம்
இன்பம் இன்பம்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Jodi, Jodi Songs Lyrics, Jodi Lyrics, Jodi Lyrics in Tamil, Jodi Tamil Lyrics, ஜோடி, ஜோடி பாடல் வரிகள், ஜோடி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *