ஆரிரரோ ஆராரோ பாடல் வரிகள்

Movie Jothi
படம் ஜோதி
Music Harshavardhan
Rameshwar
Lyricist Karthik Netha
Singers         Balaram P Iyer
Year 2022
ஆண் : பூவே பூஞ்சிறகே தாலாட்டவா
பாசம் போதுமடி பாராட்டவா
நேரில் காணும் வாழ்வின் பகலே
மார்பில் ஆடும் தாயின் நிழலே
 
ஆண் : வழிப்போக்கனை போலே தினம்
நான் அலைந்தேனே
ஒரு தேவதையாலே சிறு கூடடைந்தேனே
வரமாய் கிடைத்த முழுமையே
எனை தான் வளர்க்கும் குழந்தையே
 
குழு : ஆரிரரோ ஆராரோ
ஆடி வரும் பூந்தேரோ
ஏந்தி வரும் தீபம் அல்லோ
 
குழு : ஆரிரரோ ஆராரோ
கூடி வரும் நாளலோ
நீ எனக்கு தாலேலேலோ
 
ஆண் : விடியாமல் போன வாழ்வில் வந்த
வெளிச்சம் நீயடி
கடிகார நேரம் மீறி வந்த காலம் நீ
புரியாத வாழ்வின் கேள்வி
அதன் விடைகள் நீயடி
முடியாமல் நீளும் இன்பம் அதன் பாலம் நீ
 
ஆண் : பல காலம் துடித்தேனே வலி கூறாமலே
விழி நீரின் பெரும் ஊற்றிலே சிறு பூ பூத்ததே
பரதேசம் போனதே பணங்காசும் சேர்ந்ததே
ஒரு ஈரமான பார்வை வந்து
 
தாலாட்டுதே
 
ஆண் : வழிப்போக்கனை போலே தினம்
நான் அலைந்தேனே
ஒரு தேவதையாலே சிறு கூடடைந்தேனே
வரமாய் கிடைத்த முழுமையே
எனை தான் வளர்க்கும் குழந்தையே
 
குழு : ஆரிரரோ ஆராரோ
ஆடி வரும் பூந்தேரோ
ஏந்தி வந்த வானம் அல்லோ
 
குழு : ஆரிரரோ ஆராரோ
ஓடி வரும் தேனாறோ
கூடி வந்த வாழ்வும் அல்லோ
 
ஆண் : பல நூறு காலம் வாழ
சிறு பார்வை போதுமே
சிறகேதும் தேவை இல்லை
குறுநகை போதும்
பெரிதாக ஆசை இல்லை
உனக்காக வாழணும்
உனை கருவில் சுமந்து பார்க்க
சிறு வரம் வேணும்
 
ஆண் : உயிர் தீயே மறு தாயே
உனை காப்பாற்றுவேன்
புயல் மேலே நடை போட்டு
சிறு பூ நீட்டுவேன்
இது போதும் போதுமே
ஒளி மார்பில் ஆடுதே
அவதாரம் ஒன்று வளர்ந்து நின்று
அப்பாங்குதே
 
ஆண் : எனை ஊர் எதிர்த்தாலும்
விதி தான் தடுத்தாலும்
உன் தீஞ்சுடர் பார்வை எனை நோக விடாதே
வரமாய் கிடைத்த முழுமையே
எனை தான் வளர்க்கும் குழந்தையே
 
குழு : ஆரிரரோ ஆராரோ
ஆடி வரும் பூந்தேரோ
ஏந்தி வந்த வானம் அல்லோ
 
குழு : ஆரிரரோ ஆராரோ
ஓடி வரும் தேனாறோ
கூடி வந்த வாழ்வும் அல்லோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *