தென்பாண்டி சீமை பாடல் வரிகள்

Movie Name  Nadodi Pattukkaran
திரைப்பட பெயர் நாடோடி பாட்டுக்காரன்
Music Ilayaraja
Lyricist Piraisoodan
Singer Ilayaraja
Year 1992

ஆண் : தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே…
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயே…ஏ

ஆண் : தாலட்டுப் பாட்டில்
தாய் உன்னைப் பார்த்தேன்
ஏழெழு ஜென்மம் எடுப்பேன்
ஹோ என் தாயைக் கண்டு ரசிப்பேன்

ஆண் : தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே…
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயே…ஏ…

ஆண் : கண்ணுபடும் பிள்ளைக்கென்றே
காலடியில் மண்ணெடுப்பாள்
கால் முளைத்தே ஓடி விட்டால்
கண் விழித்தே தாய் துடிப்பாள்

ஆண் : பள்ளிக்கு போகாத பாவியவள்
உள்ளத்தில் நேர்மையில் யோகியவள்
சாமிக்கும் காணிக்கை போட்டு வைப்பாள்
தன் பிள்ளைக்கே வரம் கேட்டு வைப்பாள்

ஆண் : நான் வாழத்தானே
தான் வாழ்ந்த பேதை
ஆனாலும் மேதை அவள்தானோ
அன்பான அன்னை இவள்தான்

ஆண் : தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே…
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயே…ஏ…

ஆண் : என் முகத்தில் தன் முகத்தை
ஏக்கத்துடன் பார்த்திருப்பாள்
பிள்ளைக்கொரு துன்பம் வந்தால்
உள் மனசில் வேர்த்திருப்பாள்

ஆண் : வைரத்தில் மூக்குத்தி கேட்டதில்லை
மானத்தில் தாய் என்றும் ஏழையில்லை
மார்மீதும் பிள்ளைக்கு ஏணி தந்தாள்
வானத்தை நான் தொட ஆசைப்பட்டாள்

ஆண் : பாசத்துக்காக ரோசத்தைக்
கூட பாராட்ட மாட்டாள்
அன்னை தான் ஹோ நான்
பார்த்த தெய்வம் இவள்தானோ

ஆண் : தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே…
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயே…ஏ…

ஆண் : தாலட்டுப் பாட்டில்
தாய் உன்னைப் பார்த்தேன்
ஏழெழு ஜென்மம் எடுப்பேன்
ஹோ என் தாயைக் கண்டு ரசிப்பேன்

ஆண் : தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே…
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயே…ஏ…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Nadodi Pattukkaran, Nadodi Pattukkaran Songs Lyrics, Nadodi Pattukkaran Lyrics, Nadodi Pattukkaran Lyrics in Tamil, Nadodi Pattukkaran Tamil Lyrics, நாடோடி பாட்டுக்காரன், நாடோடி பாட்டுக்காரன் பாடல் வரிகள், நாடோடி பாட்டுக்காரன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *