ஆராரோ கேட்குதம்மா பாடல் வரிகள்

Movie Varisu
படம் வாரிசு
Music Thaman S
Lyricist Vivek
Singers         K. S. Chithra
Year 2023

பெண் : அ.. ஆஆ.. அ.. ஆஆ..
 
பெண் : ஆராரிஆராரோ கேட்குதம்மா
நேரில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா
 
பெண் : பிள்ளை வாசத்தில் ஆசைகள்
தோரணம் சூடுதம்மா
நெஞ்சம் ஆனந்த மேகத்தில்
ஊஞ்சலும் ஆடுதம்மா
 
பெண் : என் உயிரில் இருந்து
பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும்
இதய துடிப்பும்
மீண்டும் இங்கே
 
பெண் மற்றும் குழு :
இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்று விடுமா
 
பெண் மற்றும் குழு :
என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கி விடுமா
 
பெண் : அ… ஆஆ… அ… ஆஆ..
 
பெண் மற்றும் குழு :
பால் முகம் கானவே
நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்டதேன்
ஆரோ!
கால் தடம் வீழவே
நான் துடித்தேன்
உனை தாய் மடி ஏந்துதே
தாலோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *