பாபஞ்செய்யாதிரு பாடல் வரிகள்

Movie Iravin Nizhal
படம் இரவின் நிழல்
Music A. R. Rahman
Lyricist Kaduveli Sithar
Singers         Niranjana Ramanan,
Keerthana Vaidyanathan
Year 2022
பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே ..ஏ ..
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே….
 
பெண் : சாபேங்கொடுத்திட லாமோ
விதி தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோப‌ந் தொடுத்திட லாமோ
இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ
 
பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே….
 
பெண் : சொல்லருஞ் சூதுபொய் மோசம்
செய்தாற் சுற்றத்தை முற்றாய்த்
துடைத்திடும் நாசம்
சொல்லருஞ் சூதுபொய் மோசம்
செய்தாற் சுற்றத்தை முற்றாய்த்
துடைத்திடும் நாசம்
நல்லபத்திவிசு வாசம்
எந்த நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்.
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்..
 
பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே….
 
பெண் : நல்லவர் தம்மைத்தள் ளாதே
அறம் நாலெட்டில் ஒன்றேனும்
நாடித்தள்ளாதே
நல்லவர் தம்மைத்தள் ளாதே
அறம் நாலெட்டில் ஒன்றேனும்
நாடித்தள்ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள்ளாதே
கெட்ட பொய்ம்மொழிக் கோள்கள்
பொருந்த விள்ளாதே.
பொல்லாங்கில் ஒன்றுங்கொள்ளாதே
கெட்ட பொய்ம்மொழிக் கோள்கள்
பொருந்த விள்ளாதே
 
பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே….
 
பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே….
 
பெண் : மெய்ஞ்ஞானப் பாதையி லேறு
சுத்த‌ வேதாந்த வெட்டவெளினைத் தேறு..
ஆஅ .ஆஆஆ…ஆஆஆ….
மெய்ஞ்ஞானப் பாதையி லேறு
சுத்த‌ வேதாந்த வெட்டவெளினைத் தேறு..
அஞ்ஞான மார்க்கத்தை தூறு
உன்னை அண்டினோர்க் கானந்த
மாம்வழி கூறு
 
பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே..
மனமே….மனமே….
பாபஞ்செய் யாதிரு மனமே..
 
பெண் : நல்ல வழிதனை நாடு
எந்த நாளும் பரமனை நத்தியே தேடு
நல்ல வழிதனை நாடு
எந்த நாளும் பரமனை நத்தியே தேடு ..தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு
அந்த வள்ளலை நெய்சினில்
வாழ்த்திக்கொண் டாடு…
 
பெண் : பாபஞ்செய் யாதிரு மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
நாளைக் கோபஞ்செய் தேயமன்
கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே..
பாபஞ்செய் யாதிரு மனமே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *