மாயவா தூயவா பாடல் வரிகள்

Movie Iravin Nizhal
படம் இரவின் நிழல்
Music A. R. Rahman
Lyricist Madhan Karky
Singers         Shreya Ghoshal
Year 2022
பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆஹ்…..ஆ…..
ஆ….ஆ…..ஆ…..ஆஹ்…..ஆஹ்….ஆ…..
ஆ….அ…..ஆ…..அ…..ஆஹ்…..ஆ…..ஆ…..
 
பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா…..
மாதவா யாதவா குழல் ஊதவா
இதழோடு இசையாக வா
 
பெண் : உன் மார்பே என் மாகானம்….
உன் பார்வை என் பூங்கானம்……
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா…….உன் நாவா…….கண்ணா வா……
 
பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா….ஆ…..
 
பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆரா…..ஆஹ்…..ஆ…..
ஆ….ஆ…..ஆ…..ஆரா……ஆஹ்…..ஆ…..
ஆ….அ…..ஆ…..அ…..ஆஹ்…..ஆ…..ஆ…..
 
பெண் : பூக்களை கோர்க்கின்ற சரங்களிலே
ஏக்கங்கள் கோர்திவள் காத்திருக்க
யாக்கையில் அணிந்திட வா….
ஆநிரை தூங்கிடும் இரவினிலே
அதிராமல் ஆடிட வா….
உதிராமல் சூடிட வா…..
 
பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா….ஆ…..
மாதவா யாதவா குழல் ஊதவா
இதழோடு இசையாக வா
 
பெண் : உன் மார்பே என் மாகானம்….
உன் பார்வை என் பூங்கானம்……
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா…..உன் நாவா…..கண்ணா வா…ஆ…..
 
பெண் : மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா….ஆ…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *