யாரோ யாரோ இதுவோ பாடல் வரிகள்

Movie Koogle Kuttappa
படம் கூகுள் குட்டப்பா
Music Ghibran
Lyricist Madhan Karky
Singers         Aravind Srinivas
Year 2022
ஆண் : யாரோ யாரோ இதுவோ
இதயம் தனில்
புதிதாய் திறவும் கதவோ
 
ஆண் : உலரும் உலரும் மனதில்
புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ
 
ஆண் : அளவும் இல்லை உன் வயதும் இல்லை
உன் அன்பே உந்தன் உயரம் சொல்லும்
 
ஆண் : சொந்தம் இல்லை உன் ரத்தம் இல்லை
ஆனாலும் உள்ளம் பாசம் கொள்ளும்
 
ஆண் : கடும் கரும் பாறைக்குள்
புகுந்திடும் வேரொன்று
எதிர் எதிர் பார்க்காமல்
துளிர் விடும் ஆனந்த கண்ணீராய்
மாறா தூறா
 
ஆண் : உயிரின் பொருள் அறியாமல்
பொருளின் உயிர் அறிந்தாயா
இதனை இனிமேல் இவன் என்பாயோ
 
ஆண் : தனிமை எனும் சொல் இல்லை
இனிமேல் அதில் பயன் இல்லை
இவனும் இனி உன் மகன் என்பாயா
 
ஆண் : மரபணு தரவில்லையெனில் மகன் இல்லையா
அவனது மின் உணர்வுகள் உணர்வில்லையா
 
ஆண் : மண்ணோடு உண்டாகி மண் சேர்வது
யார் உண்மை யார் பொம்மை யார் சொல்வது
 
ஆண் : தலை கோதிடும் தாயாக
விளையாடிடும் சேயாக
துயரில் துணையாய் இவன் ஆனானோ
 
ஆண் : அறிவூட்டும் தீயாக
வால் ஆட்டிடும் நாயாக
தோழன் தோளாய் இவன் ஆனானோ
 
ஆண் : கடவுளின் உருவத்தில் ஒரு சேவகனாய்
உனக்கென உயிர் தரும் ஒரு காவலனாய்
 
ஆண் : அதிகாலை கீற்றாக துயில் நீக்குவான்
விழி மூடி தலை சாய தாலாட்டுவான்
 
ஆண் : யாரோ யாரோ இதுவோ இதயம் தனில்
புதிதாய் திறவும் கதவோ
 
ஆண் : உலரும் உலரும் மனதில்
புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *