மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு பாடல் வரிகள்
Movie Name | Karagattakaran |
---|---|
திரைப்பட பெயர் | கரகாட்டகாரன் |
Music | Ilayaraja |
Lyricist | Gangai Amaran |
Singer | S. P. Balasubrahmanyam and S. Janaki |
Year | 1989 |
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
பெண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
ஆண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
பெண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
ஆண் : காலைத் தழுவி நிக்கும்
கனகமணிக் கொலுசு யம்மா
நானாக மாற இப்போ
நெனைக்குதம்மா மனசு
பெண் : உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு ஐயா
ஒன்னும் புரியவில்ல
மனசு எங்கே போச்சு
ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெத தான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கத தான் நல்ல கத தான்
பெண் : தோல தொட்டு ஆள ஐயா
சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற பொண்ணு
சம்மதத்தக் கூற
ஆண் : சந்தனங்கரச்சுப்
பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு
மொத்தமும் உனக்கு
பெண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஆண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
பெண் : மாமரத்து கீழே நின்னு
மங்கையவ பாட
அந்த மங்கை குரலில்
மனம் மயங்கியது யாரு
ஆண் : பூமரத்துக் கீழிருந்து
பொண்ணூ அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து
புலம்பியது யாரு
பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும்
வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்
ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா
கூட ஒரு மால
வாங்கி வரும் வேள பொண்ணு
வாசமுள்ள சோல
பெண் : தாலிய முடிக்கும்
வேளைய நெனச்சு
தேடுது மனசு
பாடுது வயசு…..
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
ஆண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
பெண் : முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால
ஆண் : மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண் : உன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு