இந்த மான் உந்தன் சொந்த மான் பாடல் வரிகள்

Movie Name  Karagattakaran
திரைப்பட பெயர் கரகாட்டகாரன்
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer Ilayaraja  and K. S. Chithra
Year 1989

பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

ஆண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே…

பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த தான்

ஆண் : வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
பெண் : நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே

ஆண் : அன்னமே…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே

பெண் : எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே

பெண் : இந்த மான்
உந்தன் சொந்த மான்
ஆண் : பக்கம் வந்து தான்
சிந்து பாடும்

பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண் : கண்மணியே…
பெண் : சந்திக்க வேண்டும் தேவனே
ஆண் : என்னுயிரே…

பெண் : பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
ஆண் : பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே

பெண் : என்னத்தான்…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்

ஆண் : மோகம் தான் சிந்தும் தேகம் தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

ஆண் : இந்த மான்
பெண் : உந்தன் சொந்த மான்
ஆண் : பக்கம் வந்து தான்
பெண் : சிந்து பாடும்

பெண் : இந்த மான்
ஆண் : எந்தன் சொந்த மான்
பெண் : பக்கம் வந்து தான்
ஆண் : சிந்து பாடும்

பெண் : சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண் : கண்மணியே…
சந்திக்க வேண்டும் தேவியே
பெண் : என்னவனே…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Karagattakaran, Karagattakaran Songs Lyrics, Karagattakaran Lyrics, Karagattakaran Lyrics in Tamil, Karagattakaran Tamil Lyricsகரகாட்டகாரன், கரகாட்டகாரன் பாடல் வரிகள், கரகாட்டகாரன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *