மாரியம்மா மாரியம்மா பாடல் வரிகள்

Movie Name  Karagattakaran
திரைப்பட பெயர் கரகாட்டகாரன்
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer Malaysia Vasudevan and K. S. Chithra
Year 1989

ஆண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

ஆண் : தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்

பெண் : நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

ஆண் : உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
பெண் : காவல் நீதான் காளியம்மா

ஆண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண் : மண்ணுக்குள் நீ நல்ல
நீரம்மா
காத்தும் கனலும் நீயம்மா

ஆண் : வானத்தபோல் நின்னு பாரம்மா
வந்தேன் தேடி நானம்மா

பெண் : இந்த மனம் முழுதும் நீதானே
வந்த வழி துணையும் நீதானே

ஆண் : தங்க திருவடிய தொழுதோமே
இங்கு மனம் உருக அழுதோமே

பெண் : சீரேஸ்வரி காமேஸ்வரி
வேறாரு நீதானே காப்பு

ஆண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண் : கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

ஆண் : வானெல்லாம் வாழ்த்துத்தான்
கேட்கட்டும்
வாழ்வே வளமே பாக்கட்டும்

பெண் : நீ எங்க தாய் என்று காணட்டும்
நிழலும் நிஜமா மாறட்டும்

ஆண் : சக்தி முழுதும் தந்து காப்பாயே
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே

பெண் : பக்தி மனம் விரும்பும் என் தாயே
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே

ஆண் : சாட்சி சொல்லும் தாயே துணை
தீயெல்லாம் பூவாக மாறட்டும்

பெண் : மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

ஆண் : கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

பெண் : தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்

ஆண் : நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

பெண் : உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
ஆண் : காவல் நீதான் காளியம்மா

ஆண் மற்றும் பெண் :
{மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா} (2)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Karagattakaran, Karagattakaran Songs Lyrics, Karagattakaran Lyrics, Karagattakaran Lyrics in Tamil, Karagattakaran Tamil Lyricsகரகாட்டகாரன், கரகாட்டகாரன் பாடல் வரிகள், கரகாட்டகாரன் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *