வாடியே காதலியே பாடல் வரிகள்
Movie | Randoms | ||
---|---|---|---|
படம் | பாடல் பதிவுகள் | ||
Music | Randoms | ||
Lyrics | |||
Singers | |||
Year | 2020 |
வாடியே காதலியே
என்னை நீ பாக்காம போகறியே
உனக்காக நான் காத்திருந்தேன்
என்னை நீ பாக்காம போகறியே
பார்க்கும் பார்வையில
பத்திக்கும் மனசு
கணக்க முடியாம துடிக்குமே உசுரு
நெஞ்சோடு வந்து தன்னால பேசு
உன்னால ஆகிட்டேன் நான் முழு லூசு
தானா தானா தந்தானே நானா
தானானே தானே தந்தானே நானா
தானே தானா தந்தானே நானா
தானானே தானே தந்தானே நானா
நீ காதல் சொன்ன வார்த்தைக்காக
இங்கு ஒடோடி வந்தேன்டி…
தனியாக நான் இருந்தேன் நினைச்சேன்
பக்கத்தில் நீயாடி….
புதிதாக ஓர் பூக்கள் தோட்டத்தில்
உன்னை பார்த்தேனடி
வளர்ந்து வந்த பூக்கள் எல்லாமே
உன்னை கண்டு ரசிக்குமடி
காதல் அழகை பார்த்துபுட்டேன்
என்ன மாயம் நீ செஞ்சிபுட்ட
பேசி பேசி சிரிச்சி சிரிச்சி
என்னை நீ கவுத்து விட்ட
தானா தானா தந்தானே நானா
தானானே தானே தந்தானே நானா
தானே தானா தந்தானே நானா
தானானே தானே தந்தானே நானா
ஹே நிலவின் நிழலில்
தெரிஞ்சது உன் முகத்தை
பார்க்க துடிப்பேனடி
நிழலில் உன் முகத்தை பார்த்ததுமே
நான் என்னை மறந்தேனடி
நீ நடந்து வந்த பாதை எல்லாமே
பூக்கள் முளைக்குமடி
ஹே வானத்தில் உள்ள நட்சத்திரங்கள்
உன்னை காண வந்ததடி
காதல் போதையில் நானும் இருந்தேன்
தெளியும் மருந்தாக நீயும் வந்த
காதல் இல்லாம நீயும் இல்லாம
உசுரே இல்லையடி
ஹே உன் அழகுல மயங்கிட்டேன்
உன் சிரிப்புல விழுந்துட்டேன்
என் மனசார உன்னை காதலிப்பேன்
படுத்தாலும் தூக்கம் இல்லை
உன் நினப்புல இருந்தேன் புள்ள
காதல் உலகத்தில் நான் இருந்தேன்
உன் நினைப்புல நானும் தினமும் உருகி
உனக்காக இங்கே ஒரு பாடல் பாடி
அங்கே இங்கே பார்த்தாலும் உன் முகம்தான்டி
நீதானே எனக்கு பியூச்சர் பொண்டாட்டி
வாடா மாமா பக்கத்துல
மடியில் சாய இடம் ஒன்னு குடுக்குறேன்
காக்க உன்னை வெக்க மாட்டேன்
கூட்டிட்டு போ பின்னாடி ஓடி வரேன்
பார்த்தாலே போதும் பின்னாலே வாரேன்
பின்னால வந்தா முத்தத்தை தாரேன்
பார்க்காம போனா தனியாக நிப்பேன்
உன்னால ஆகி விட்டேன் முழு லூசா
முழு லூசா
ஹே முழு லூசா
முழு லூசா…….