என் புன்னகை நீதான்டி பாடல் வரிகள்

Movie Randoms
படம் பாடல் பதிவுகள்
Music Randoms
Lyrics
Singers         Surya infiusics
Year 2020

என் புன்னகை சாரல் நீயடி
என் காதல் தோட்டமும் நீயடி
உன்னை தேடியே வந்தேன் நானடி
நீ அங்கு இல்லையடி

உனக்காக நானும் வருவேனே
உயிர் கூடதான் தினம் தருவேனே
நீ அங்கு இன்று இல்லையேல்
நான் இங்கு இல்லையடி

நீ எங்கே சென்றாலும்
எங்கே சென்றாலும்
 நிழலாய் இருப்பேனே
ஸ்வாசக்காற்று 
உன் விழிகளிலே

நீ எங்கே விழுந்தாலும்
எங்கே இருந்தாலும்
ஒளியாய் இருப்பேனே
விழியே விழியே 
நிலவின் நகலே

என் காதலே நீதானடி
என் நெஞ்சுக்குள் புகுந்தாயடி
பார்வையால் கொன்றாயடி
ஏன் பாதியில் சென்றாயடி

என் புன்னகை சாரல் நீயடி
என் காதல் தோட்டமும் நீயடி
உன்னை தேடியே வந்தேன் நானடி
நீ இங்கு இல்லையடி

உனக்கென நானும் இருக்கவே
எனக்கென யாரும் இல்லையே
என்றுமே என்னோடு நீ
வாழ்வதே போதுமடி

நீ எங்கே இருந்தாலும்
கண்ணில் நின்றாயே
இறகாய் உன் இதழில்
அழகாய் வாழ உருகுறேண்டி

நீ என்னை மறந்தாலும்
என்னில் கரைந்தாயே
நிதமும் நம் கனவில்
ஒன்றாய் வாழ ஏங்குறேண்டி

என் காதலே நீதானடி
என் நெஞ்சுக்குள் புகுந்தாயடி
பார்வையால் கொன்றாயடி
ஏன் பாதியில் சென்றாயடி

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *