எங்கிருந்தோ வந்தான் பாடல் வரிகள்

Movie Oh My Dog
படம் ஓ மை டாக்
Music Nivas K Prasanna
Lyricist Pa Vijay
Singers         Pradeep Kumar,
Brindha Sivakumar
Year 2022
பெண் : கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ
 
ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
இங்கிவனை யான் பெற
என்ன தவம் செய்தேன்
 
ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
இங்கிவனை யான் பெற
என்ன தவம் செய்தேன்
 
ஆண் : சொன்னபடி கேட்பான்
துணி மணிகள் காத்திடுவான்
ஆட்டங்கள் காட்டி அலுக்காமல் செய்திடுவான்
 
ஆண் : வாலாட்டும் சேய் நீயே
தாலாட்டும் என் தாய் நீயே
உன் நன்றி அறிவேனே
உனை ஒன்றி நான் வாழ்வேனே
 
ஆண் : மொழியில்லா உன் பேச்சில்
எனை நானும் மறப்பேனே
நீ பேசும் அன்பாலே
என் உலகம் புதிதாகும்
ஓஓஓஓஓ
 
ஆண் : பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய்
நண்பனாய் நல்லாசிரியனுமாய்
 
ஆண் : எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
கண்ணை இமை இரண்டும் காப்பது போல்
எப்போதும் உனை நான் காத்திருப்பேன்
காத்திருப்பேன் காத்திருப்பேன் காத்திருப்பேன் ஏ…..
 
பெண் : கண்ணே தங்கமே வாராய் ஆஆஆ…

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *