அரும்பரும்பா சரம் பாடல் வரிகள்

Movie Name  Chinna Thayee
திரைப்பட பெயர் சின்ன தாயி
Music Ilayaraja
Lyricist Vaali
Singer P. Susheela
Year 1992

பெண் : அரும்பரும்பா சரம்
தொடுத்த அழகு மலர் மாலை
இது ஆராரோ தரையினிலே
தவழ்ந்து வந்த தங்க நிலா
மேனியிது ஆராரோ

பெண் : மகளே நீ மயங்காதே
மணி விழியே கலங்காதே
பூச்சூடும் மணி பூந்தேரே
கூத்தாடும் பசும் பாலாறே

பெண் : அரும்பரும்பா சரம்
தொடுத்த அழகு மலர் மாலை
இது ஆராரோ தரையினிலே
தவழ்ந்து வந்த தங்க நிலா
மேனியிது ஆராரோ

பெண் : ஒருவன் இசையினிலே
விரித்த வலையினிலே இரையாக
நான் விழுந்தேனே மனிதன்
குணங்களையும் மாறும்
நிறங்களையும் அறியாமல்
நான் இருந்தேனே

பெண் : நஞ்சை விட
கொடிது ஆடவனின் மனது
அன்னை இதை அறிந்தால்
அல்லல் பட்ட பிறகு

பெண் : ஏமாந்தால் தாயும்
என்னை போல நீயும் ஆசை
வைக்காதே பின்பு அவதி
படாதே

பெண் : அரும்பரும்பா சரம்
தொடுத்த அழகு மலர் மாலை
இது ஆராரோ தரையினிலே
தவழ்ந்து வந்த தங்க நிலா
மேனியிது ஆராரோ

பெண் : புதிய தலைமுறையே
வளரும் இளம் பிறையே
தேயாமல் வாழ்ந்திடு நீயே
இளமை தலை விரிக்க
எனையே விலை கொடுத்து
மடி மீது வாங்கிய சேயே

பெண் : உன்னை விட
எனக்கு சொத்து சுகம்
எதற்கு இந்த உயிர்
உடலில் உன்னை
நம்பி இருக்கு

பெண் : நாம் காண கூடும்
இள வேனில் காலம்
மார்பினில் ஆடும் சிறு
மாதுளம் பூவே

பெண் : அரும்பரும்பா
சரம் தொடுத்த அழகு
மலர் மாலை இது
ஆராரோ

பெண் : மகளே நீ மயங்காதே
மணி விழியே கலங்காதே
பூச்சூடும் மணி பூந்தேரே
கூத்தாடும் பசும் பாலாறே

பெண் : அரும்பரும்பா
சரம் தொடுத்த அழகு
மலர் மாலை இது
ஆராரோ

Tags: Chinna Thayee, Chinna Thayee Songs Lyrics, Chinna Thayee Lyrics, Chinna Thayee Lyrics in Tamil, Chinna Thayee Tamil Lyrics, சின்ன தாயி, சின்ன தாயி பாடல் வரிகள், சின்ன தாயி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *