கோட்டைய விட்டு பாடல் வரிகள்

Movie Name  Chinna Thayee
திரைப்பட பெயர் சின்ன தாயி
Music Ilayaraja
Lyricist Vaali
Singer S. Janaki
Year 1992

பெண் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி ஏழை பொண்ணு
கூக்குரல் கேட்டு காத்திட
வேணும் சுடலை மாட சாமி

பெண் : திக்கு திசை
ஏது அன்பு தெய்வம்
உதவாது தன்னந்தனியாக
நிற்கும் கன்னி இளமாது

பெண் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி ஏழை பொண்ணு
கூக்குரல் கேட்டு காத்திட
வேணும் சுடலை மாட சாமி

பெண் : இல்லாத
ஏழைகள் தாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் ஏன் என்று
கேக்க ஓர் நாதி இல்ல

பெண் : செல்வாக்கு
மேவிய ஊரார்க்கு
மட்டும் நீ நல்வாக்கு
சொல்வது நீதி இல்லை

பெண் : தெய்வத்தின்
பார்வையில் ஜாதி
இல்லை தெய்வத்தை
போல நீ இருக்க
உன்னைத்தான் நம்பி
நான் இருக்க நல்வாக்கு
எங்கே கூறி விடு நம்பிக்கை
வைத்தேன் வாழ்வு கொடு

பெண் : எப்போது தீரும்
இப்போது காணும் என்
வேதனை அம்மாடி
இன்னும் தாளாது இங்கு
உன் சோதனை

பெண் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி ஏழை பொண்ணு
கூக்குரல் கேட்டு காத்திட
வேணும் சுடலை மாட சாமி

பெண் : பொன் மாலை
வேளையில் கை சேர
மெய் சேர ஒன்றான
காட்சியும் நாடகமா

பெண் : வெவ்வேறு
மூலையில் நீ வாழ
நான் வாழ கை பிள்ளைதான்
ஒரு ஞாபகமா கை விட்ட
காதலின் சாட்சியமா

பெண் : இன்னொரு
தோளில் மாலை இட
என் உயிர் இங்கே
தாங்கிடுமா உன்னுடன்
வாழ்ந்த காலமெல்லாம்
சொப்பனம் போலே
ஆகிடுமா

பெண் : கண்டவை யாவும்
கற்பனை கோலம் என்றாகுமா
உள்ளங்கள் மீண்டும் வெள்ளங்கள்
போல ஒன்றாகுமா

பெண் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி ஏழை பொண்ணு
கூக்குரல் கேட்டு காத்திட
வேணும் சுடலை மாட சாமி

பெண் : திக்கு திசை
ஏது அன்பு தெய்வம்
உதவாது தன்னந்தனியாக
நிற்கும் கன்னி இளமாது

பெண் : கோட்டைய
விட்டு வேட்டைக்கு
போகும் சுடலை மாட
சாமி ஏழை பொண்ணு
கூக்குரல் கேட்டு காத்திட
வேணும் சுடலை மாட சாமி

Tags: Chinna Thayee, Chinna Thayee Songs Lyrics, Chinna Thayee Lyrics, Chinna Thayee Lyrics in Tamil, Chinna Thayee Tamil Lyrics, சின்ன தாயி, சின்ன தாயி பாடல் வரிகள், சின்ன தாயி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *