அம்மன் கோவில் பாடல் வரிகள்

Movie Name  Aranmanai Kili
திரைப்பட பெயர் அரண்மனை கிளி
Music Ilayaraja
Lyricist Muthulingam
Singer Swarnalatha and Minmini
Year 1993

குழு : லுலுலுலு……லுலுலுலு….
லுலுலுலு……லுலுலுலு….

பெண்கள் : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….
கும்பங்களை ஏத்தி வச்சு……
குலவி இட்டு பாடுங்கடி
அம்மன் கோயில் வாசலிலே
ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு….

குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….

பெண் : பத்தினியே காளியம்மா
பக்தியுள்ள மக்களுக்கு வேலியம்மா
உந்தன் குங்குமத்த சூடி வந்தா
மங்கலங்கள் பொங்கி வரும் வாழ்க்கையிலே

பெண் : ஊருக்குள்ள எங்களுக்கு
உன்ன விட்டா ஆளேது
நாங்க உன்ன கும்பிடாத நாளேது
பூமிக்குள்ள ஊத்து போல
பொங்கி நிக்கும் தாயம்மா
சாமிக்குள்ள நல்ல சாமி நீயம்மா

குழு : சிங்கம் உந்தன் வாகனம்தான்
எங்க தாயே
அண்டம் பிண்டம் எங்கும் உள்ள அன்பு தாயே

பெண்கள் : அடி பட்டித்தொட்டி ஏழைகளை ரட்சிப்பாயே

குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….

பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே
ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு….

குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….

பெண்கள் : ஆஅ…..ஆஅ……ஆஆ…..ஆஆ…..ஆஅ….ஆஅ…..

குழு : ………………………..

பெண் : எங்க நெஞ்சங்கள வானத்திலே
ரெக்க கட்டி ஆடுகிற நாளு இது
இங்கு வஞ்சங்களே ஏதும் இல்லே
நல்லவங்க வாழுகிற ஊரு இது

பெண் : மாதம் இங்கு மூணு மழை
பெய்ய வேணும் தன்னாலே
பஞ்சம் இன்றி வாழ வேணும் உன்னாலே
தேக்கி வச்ச ஆசையெல்லாம் சீக்கிரத்தில் ஈடேற
நல்ல வழி காட்டி விடு முன்னேற

குழு : மண்ணுலகம் சுத்தி வரும்
தன்னத்தானே
எங்க மனம் சுத்தி வரும் உன்னத்தானே

பெண்கள் : அடி புத்தி தரும் சித்தி தரும்
கொம்பு தேனே

குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….

பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே
ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு….

குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….
கும்பங்களை ஏத்தி வச்சு……
குலவி இட்டு பாடுங்கடி

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Aranmanai Kili, Aranmanai Kili Songs Lyrics, Aranmanai Kili Lyrics, Aranmanai Kili Lyrics in Tamil, Aranmanai Kili Tamil Lyrics, அரண்மனை கிளி, அரண்மனை கிளி பாடல் வரிகள், அரண்மனை கிளி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *