ராத்திரியில் பாடும் பாடல் வரிகள்

Movie Name  Aranmanai Kili
திரைப்பட பெயர் அரண்மனை கிளி
Music Ilayaraja
Lyricist Vaali
Singer Malaysia Vasudevan, Mano and Minmini
Year 1993

குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஆண் : ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு
பெண் : ஆத்தங்கரை
ஈரக்காத்து மேலே பட்டு
மோகம் ஆச்சு

ஆண் : போடு நிலாச்
சோறு என் பொன்னுமணி
தேரு
பெண் : கூட வந்து சேரு
நான் சொட்டும் கனிச் சாறு

ஆண் : ஹே ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு
பெண் : ஆத்தங்கரை
ஈரக்காத்து மேலே பட்டு
மோகம் ஆச்சு

ஆண் : கள்ளழகர் வைகை
ஆற்றில் கால வைக்கும்
நல்ல நாளில் எட்டு பட்டி
ஊரு சனம் கட்டுச் சோறு
கட்டி வரும்

பெண் : சொக்கனுக்கு
மீனாள் போல தக்க
துணை வாச்சதாலே
சின்னஞ்சிறு ஜோடி
எல்லாம் சித்திரையில்
இங்கு வரும்

ஆண் : உன் மேல தான்
ஆச வச்சேன் வேறெதுக்கு
மீசை வச்சேன்
பெண் : என் புருஷன்
நீயாகத்தான் போன
சென்மம் பூச வச்சேன்

ஆண் : உன்னோடு தான்
நானும் கூட என்னோடு
தான் நீ கூட போடு
முந்தானை ஹே

பெண் : ஆத்தங்கரை
ஈரக்காத்து மேலே பட்டு
மோகம் ஆச்சு
ஆண் : ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு

பெண் : கூட வந்து சேரு
நான் சொட்டும் கனிச் சாறு
ஆண் : ஆ போடு நிலாச்
சோறு என் பொன்னுமணி
தேரு

ஆண் : எல்லோருக்கும்
எழுதி வச்சான் எங்களைத்தான்
கட்டி வச்சான் பொன்ஜாதியோ
பூன்தோரணம் நானோ ரொம்ப
சாதாரணம்

ஆண் : வெண்ணிலவ
மேகம் போல என்ன
அவ மூடி வைப்பா
மத்தவங்க கண்ணு பட்டா
தத்தளிப்பா தான் தவிப்பா

ஆண் : ஊருக்கவ ராணி
போல எனக்கு அவ அம்மன்
போல சொல்ல போனா
என்ன போல பாக்யவான்
யாரும் இல்லை

ஆண் : தாரம் கூட
தாயைப் போல ஈடு
சொல்ல யாரும் இல்லை
எல்லாம் என் யோகம்

ஆண் : ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து
மேலே பட்டு மோகம் ஆச்சு

ஆண் : போடு நிலாச்
சோறு என் பொன்னுமணி
தேரு கூட வந்து சேரு
நான் சொட்டும் கனிச் சாறு

ஆண் : ஹே ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து
மேலே பட்டு மோகம் ஆச்சு

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Aranmanai Kili, Aranmanai Kili Songs Lyrics, Aranmanai Kili Lyrics, Aranmanai Kili Lyrics in Tamil, Aranmanai Kili Tamil Lyrics, அரண்மனை கிளி, அரண்மனை கிளி பாடல் வரிகள், அரண்மனை கிளி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *