அடி பூங்குயிலே பாடல் வரிகள்

Movie Name  Aranmanai Kili
திரைப்பட பெயர் அரண்மனை கிளி
Music Ilayaraja
Lyricist Vaali
Singer Mano and Minmini
Year 1993

பெண் : ………………………

ஆண் : { அடி பூங்குயிலே
பூங்குயிலே கேளு நீ
பாட்டெடுத்த காரணத்த
கூறு } (2)
யாரிடத்தில் உன் மனசு
போச்சு நூல போல உன்
உடம்பு ஆச்சு

பெண் : அடி பூங்குயிலே
பூங்குயிலே கேளு நீ
பாட்டெடுத்த காரணத்த
கூறு யாரிடத்தில் உன்
மனசு போச்சு நூல போல
உன் உடம்பு ஆச்சு

பெண் : வட்டம் இட்டு
சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன
பேச்சு

பெண் : பூங்குயிலே
பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த
காரணத்த கூறு

ஆண் : ஆத்தங்கரை
அந்தப்புறம் ஆக்கி
கொள்ளவா அந்த
அக்கரைக்கும்
இக்கரைக்கும் கோட்டை
கட்டவா

பெண் : மாமன் கையில்
பூவை தந்து சூடி கொள்ளவா
அடி ஆசைஎன்னும் ஊஞ்சல்
கட்டி ஆடி கொள்ளவா

ஆண் : சொல்லு சொல்லு
திட்டம் என்ன சொல்லுவது
கஷ்டமா பொத்தி பொத்தி
வச்சதென்ன என்ன
என்னவோ இஷ்டமா

பெண் : கூவாம கூவுறியே
கூக்கூ கூக்கூ பாட்டு
மாட்டாம மாட்டிபுட்ட
சொக்கு பொடி போட்டு

ஆண் : யாரிடத்தில்
உன் மனசு போச்சு
நூல போல உன்
உடம்பு ஆச்சு

பெண் : பூங்குயிலே
பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த
காரணத்த கூறு

பெண் : ஊரை எல்லாம்
சுத்தி வந்த ஒத்தக்கிளியே
இப்போ ஓரிடத்தில்
நின்றதென்ன சொல்லு
கிளியே

ஆண் : சொந்த பந்தம்
யாரும் இன்றி வந்த
கிளியே ஒரு சொந்தம்
இப்போ வந்ததென்ன
வாசல் வழியே

பெண் : வேரு விட்ட
ஆலம் கன்னு வானம்
தொட பாா்க்குது வானம்
தொடும் ஆசையில மெல்ல
மெல்ல பூக்குது

ஆண் : பூ பூவா பூக்க
வச்ச மாமன் அவன்
யாரு பாடுகிற பாட்டுல
தான் நீயும் அதை கூறு

பெண் : யாரிடத்தில்
உன் மனசு போச்சு
நூல போல உன்
உடம்பு ஆச்சு

பெண் : பூங்குயிலே
பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த
காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு
போச்சு நூல போல உன்
உடம்பு ஆச்சு

ஆண் : வட்டம் இட்டு
சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன
பேச்சு

பெண் : பூங்குயிலே
பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த
காரணத்த கூறு

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Aranmanai Kili, Aranmanai Kili Songs Lyrics, Aranmanai Kili Lyrics, Aranmanai Kili Lyrics in Tamil, Aranmanai Kili Tamil Lyrics, அரண்மனை கிளி, அரண்மனை கிளி பாடல் வரிகள், அரண்மனை கிளி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *